டிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு!

டாடா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவைகள் நிறுவனமான டிசிஎஸ் குஜராத்தில் உள்ள தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையினை இரட்டிப்பாக உள்ளதாக அதன் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

டாடா குழுமத்தின இந்த அறிவிப்பினை குஜராத்தில் சந்திரசேகரன் தெரிவித்த போது குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல் நித்தின் படேல் மற்றும் பிற அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

குஜராத் - டாடா குழுமம்

குஜராத்தில் டாடா குழுமம் ஏற்கனவே மின்சாரம், ஆட்டோமொபைல், இரசாயனம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் மிகப் பெரிய முதலீடுகளைச் செய்துள்ளது.

வேலை வாய்ப்புகள்

மாநிலத்தின் துணை முதல்வரான நித்தின் படேல் இது குறித்துச் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கும் போது தற்போது குஜராத்தில் உள்ள 12,000 டிசிஎஸ் ஊழியர்கள் எனும் எண்ணிக்கையானது 22,000 ஆக அதிகரிக்க டாடா குழுமம் உறுதி அளித்து இருப்பதாகத் தெரிவித்தார்.

எலக்ட்ரிக் கார்

மேலும் குஜராத்தில் டாடா குழுமம் எலக்ட்ரிக் கார் உற்பத்தியினைத் துவங்கும் திட்டத்தில் உள்ளதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

மின்சாரத் திட்டம்

டாடாவின் அல்ட்ரா மெகா பவர் மின்சாரத் திட்டம் குறைந்த விலை மின்சாரக் கொள்முதல் காரணத்தினால் நட்டம் அடைந்து வரும் நிலையில் இந்தச் சந்திப்பின் போது அது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

கார் உற்பத்தி

டாடா குழுமத்தின் நேனோ கார் திட்டம் குஜராத்தில் அமைக்கப்பட்ட பிறகு ஃபோர்டு, சுசூகி உள்ளிட்ட நிறுவனங்களும் அங்குத் தங்களது தொழிற்சாலைகளை விரிவு படுத்த வழிவகைச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

TCS To Hire 10,000 People Soon In Gujarat: N Chadrasekaran