அமேசானில் 18,000 வேலை வாய்ப்புகள்.. வேலையை எப்படிப் பெறுவது..!

உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 17,823 முழு நேர ஊழியர்களைப் பணிக்கு எடுக்க உள்ளது. தற்போது அமேசான் நிறுவனத்தில் 5,60,000 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அமேசான் நிறுவனமானது இ-காமர்ஸ் மட்டும் என்பது மட்டும் இல்லாமல் மளிகை பொருட்கள் விற்பனை, மருந்து பொருட்கள் விற்பனை போன்றவற்றிலும் தங்களது கவனத்தினைத் திருப்பியுள்ளது.

உலகம் முழுவதும் அமேசான் நிறுவனத்திற்கு மிகப் பேரிய அளவிலான ஊழியர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில் அதனைப் பெறுவதும் அவ்வளவு எளிய காரியம் அல்ல என்கின்றனர்.

முதல் படி

அமேசான் நிறுவனத்தின் ஊழியராக வேண்டும் என்றால் முதலில் இணையதளத்தில் உள்ள வேலை வாய்ப்புப் பக்கத்தினை நன்கு ஆராய வேண்டும். பின்னர்ப் பலகலைக்கழக வேலை வாய்ப்பு, இராணுவ வேலை வாய்ப்பு மற்றும் பிற வேலை வாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.

அமேசான் நிறுவனத்தில் உள்ள இந்தப் பணியிடங்களில் சேர நிறுவனம் சார்ப்பில் அதற்கான கூடுதல் ஆதரவாகத் திறன் மேம்படுத்துதல் மற்றும் அனுபவம் பெற்றல் போன்றவையும் அளிக்கப்படுகிறது. மேலே கூறிய திட்டங்களில் உங்களால் பங்கேற்க முடியவில்லை என்றாலும் இணையப் பக்கத்தில் உள்ள பல நேரடி வேலை வாய்ப்பு அறிவிப்புகளின் கீழும் விண்ணப்பிக்கலாம்.

 

இந்தியாவில் தற்போது உள்ள காலியிடங்கள்

தற்போது இந்திய அமேசான் அலுவலகங்களில் பெங்களூரு கிளையில் 485 நபர்களுக்கு, சென்னையில் 85 நபர்களுக்கு, டெல்லியில் 13 நபர்களுக்கும், ஹைதராபாத்தில் 269 நபர்களுக்கும் மும்பையில் 47 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல் கூறுகின்றன.

விண்ணப்பிக்கும் முன்

அமேசான் பணிகளுக்கான விண்ணப்பிக்கும் முன் நிறுவனத்தின் 14 தலைமை கொள்கைகளை அறிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு கலந்துரையாட வேண்டும். அதில் முக்கியமான ஒன்று வாடிக்கையாளர் தொல்லையாகும். இது போன்று பல வகையில் தங்களது திறனை நிரூபிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

அமேசான் பணிகளுக்கான இணையதளமானது எப்படி விண்ணப்பிப்பது மற்றும் நேர்காணல் எப்படி இருக்கும் என்ற வழிமுறைகளை அளிக்கும். முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ரெக்காரட் வீடியோ ஸ்கிரீன் அல்லது போன் ஸ்க்ரீன் முறையில் நேர்காணல் நடைபெறும். நேர்காணலின் போது வேலைக்கு விண்ணப்பித்தவர்களும் கேள்விகளைக் கேட்கலாம்.

நேர்காணல்

இவற்றுக்குப் பிறகு 3 அல்லது 4 நபர்கள் முன்னிலையில் கேள்விகள் கேட்கப்படும். இந்த நேர்காணளின் போது டிரிக்கான கேள்விகள் ஏதும் இருக்காது. எளிதாக இதில் கலந்துரையாடலாம். வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக ஆர்வமாக நிறையக் கேள்விகளைக் கேட்க வேண்டும். அவர்களைத் தான் நிறுவனம் பணிக்க எடுக்க விரும்பும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Have a great day!
Read more...

English Summary

18,000 Jobs In Amazon. How To Get It.