வங்கிகள், வாடிக்கையாளர்கள் மட்டும் இல்லாமல் வாரா கடன் அதிகரிப்புக்கு இவர்களுக்கு பங்குண்டு..!

வாரா கடன் அதிகரிப்புக்கு வங்கி மற்றும் வாடிக்கையாளர்கள் மட்டும் இல்லாமல் அரசு மற்றும் நீதிமன்றத்திற்கும் பங்குள்ளது என்று எஸ்பிஐ வங்கியின் தலைவரான ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அன்மையில் நடைபெற்ற வங்கிகளுக்கு இடையிலான மாநாட்டில் பங்கேற்ற எஸ்பிஐ வங்கி தலைவரிடம் வாரா கடன் அதிகரிப்புக்கு யார் காரணம் என்று கேட்ட போது ரஜினிஷ் குமார் இந்தப் பதிலை அளித்தது குறிப்பிடத்தக்கது.

யாருக்கெல்லாம் பங்குண்டு?

வாரா கடன் அதிகரிப்பிற்கு வங்கிகள், வங்கி அதிகாரிகள், வங்கி துறை, அரசு மற்றும் நீதிமன்றம் என அனைவருக்கும் பங்கு இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

நிலக்கரி

1996-ம் ஆண்டு வங்கிகள் நிலக்கரி வணிகத்திற்குக் கடன் அளிக்கும் போது 20 வருடத்திற்குப் பிறகு நிலக்கரித் தொகுதி ஒதுக்கீடு ரத்துச் செய்யப்படும் என்றும் நாம் வழங்கிய கடன் சிக்கலில் மாற்றிக்கொள்ளும் என்று யாருக்கும் தெரியாது என்று குறிப்பிட்டார். 214 நிலக் கரி சுரங்களுக்கு 1993-ம் ஆண்டு அனுமதி அளித்த நிலையில் அவற்றுக்கு 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம்

சில துறைகள் அதிக லாபம் அளித்து வந்தாலும் மின்சாரத் துறை இன்று வரை சிக்கலில் தான் உள்ளது. மின்சாரத் துறை வளர்ச்சி பொருளாதாரத்திற்குத் தொடர்ந்து வளர்ச்சி அளித்ஹ்டு வந்தாலும் லாபம் ஒன்றும் இல்லை என்றும் ரஜினிஷ் குமார் கூறினார்.

கடன்

கடன் அளிப்பதில் வங்கிகளுக்கு இடையில் உள்ள வழிமுறைகளும் இதற்குக் காரணமாக உள்ளது. சில நேரங்களில் முழுமையாக விதிகளைப் பின்பற்றிக் கடன் அளிக்கத் தாமதவதால் வேகமாகச் செயல்பட முயல்வது வாரா கடன் அதிகரிப்பிற்குக் காரணமாக அமைகிறது.

சிறு கடன்

சிறு கடன் அதிகளவில் அளிப்பது வங்கி துறைக்குப் பாதிப்பினை ஏற்படுத்தும். அதே நேரம் 500 கோடி ரூபாய் வரை கடன் வழங்குவதிலும் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

வங்கிகள்

ஆவணங்களைச் சரிபார்த்து கடன் வழங்குவதைத் தவிரச் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு எல்லாம் பதில் அளிக்கும் மன நிலையில் வங்கிகள் இல்லை. பல வழக்குகளில் அது தெளிவான மோசடி என்று உள்ளது. நம்பிக்கை இருந்தாலும் நாங்கள் சரிபார்ப்போம். ஆனால் அதுவும் பல இடங்களில் சரியாக நடைபெறவில்லை என்றும் கூறினார்.

Have a great day!
Read more...

English Summary

Everybody to blame for NPAs, says SBI chairman Rajnish Kumar