கேரளா கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களுக்குச் சுங்க வரி & ஐஜிஎஸ்டி விலக்கு..!

கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வெள்ளப்பெருக்கினை அடுத்து மத்திய அரசு அங்குக் கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி மற்றும் ஐஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் கேரளாவில் உள்ள வணிக நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டிய ஜிஎஸ்டிஆர் 3பி விற்பனை அறிக்கையினை ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் இருந்து காலக்கெடு நீட்டிக்கப்பட்டு 2018 அக்டோபர் 5-ம் தேதிக்குச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மக்கள் நிலை

கேரளா வெள்ளத்தில் சிக்கி 370 நபர்களுக்கு அதிகமானவர்கள் இறந்துள்ளதாகவும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு

வெள்ளப்பெருக்கிள் பாதிப்படைந்துள்ள கேரளாவிற்கு முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் நிதி அளித்த மத்திய அரசு இரண்டாம் கட்டஆக 500 கோடி ரூபாயினை அளித்துள்ளது.

ஐக்கிய அமீரகம்

அதே நேரம் ஐக்கிய அமீரக அரசு 700 கோடி ரூபாயினை நிவாரண நிதியாகக் கேரளாவுக்க அளிப்பதாகத் தெரிவித்த நிலையில் இந்தியாவில் 2004-ம் ஆண்டுக்குப் பிறகு அவ்வாறு ஒரு வெளிநாட்டில் இருந்து நிதியைப் பெற முடியாது என்றும் கூறப்படுகிறது.

பொது மக்கள்

மறு பக்கம் தனி நபர்கள், மக்கள் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் கேரளாவில் பாதிக்கப்பட்டுள் மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்று குவித்து வருவது மட்டும் இல்லாமல் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதி திட்டத்திற்கும் நேரடியாக அளித்து வருகின்றனர்.

Have a great day!
Read more...

English Summary

Govt Gives Relief To Goods For Kerala Exempted From Customs Duty, IGST