கேரளா வெள்ள பாதிப்பால் வருமான வரி தாக்கல் தேதி நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு..!

2018-2019 மதிப்பீடு ஆண்டுக்கான வருமான வரியினை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில் கேரள வெள்ளபெருக்குக் காரணத்தினால் மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்படலாம் என்பதற்காகக் கடைசி நிமிடம் வரை காத்திருந்தாலும் சிக்கல் தான் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல் கூறுகின்றன.

நிதி அமைச்சகம்

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக நிதி அமைச்சகம் வருமான வரி தாக்கல் தேதியினை மீண்டும் நீட்டிக்கலாம் என்று விவாதித்து வருவதாகக் கூறப்படுகிறது.

வாய்ப்பு

இந்த வருமான வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பானது என்பது வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு மட்டும் அளிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

ஜிஎஸ்டி

ஏற்கனவே ஜிஎஸ்டி விற்பனை வரி தாக்கல் அறிக்கை படிவமான ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தினைத் தாக்கல் செய்யக் கேரளாவிற்கு மட்டும் அக்டோபர் 5ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல்

வருமான வரி தாக்கல் செய்ய 2018 ஜூலை 31 கடைசித் தேதியாக இருந்து வந்த நிலையில் அதனை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்த நிலையில் இரண்டாம் முறையாகக் காலக்கெடு நீட்டிப்பு நன்மை அனைவருக்கும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Income Tax Return filing Deadline May Extended Beyond August 31 In Kerala And More