வரலாறு காணாத வீழ்ச்சியில் ரூபாய்.. விரிவான அலசல்..!

விடுமுறையுடன் முடிந்த வாரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய ரூபாய் தனது சாதனையை முறியடித்து வருகிறது. கடந்த திங்களன்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 69.80 என்ற அளவில் இருந்த நிலையில், வியாழனன்று 70.32 ஆகக் குறைந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது! கடந்த செவ்வாயன்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 69.89 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

காலை வர்த்தகத்தில் நாளின் துவக்கத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் இல்லாமல் போனாலும், மதியம் 12:15 மணியளவில், இதுவரை இல்லாத வகையில் சுமார் 15 பைசா குறைந்து ரூபாயின் மதிப்பு 70.24ஆக வர்த்தகம் ஆகிக்கொண்டிருந்தது.

வரலாறு காணாத வகையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்ததற்கான காரணங்களை இங்கே காணலாம்.

டர்கீஸின் லிரா, இந்திய ரூபாய் உள்ளிட்ட வளர்ந்துவரும் சந்தைகளின் பணத்தின் படுதோல்வி:

டர்கி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியம் மீது இருமடங்கு வரிவிதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் பயமுறுத்தலுக்குப் பிறகு, டர்கீஸ் பணமான லிராவின் டாலருக்கு நிகரான மதிப்பு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாய் உள்ளிட்ட வளர்ந்துவரும் சந்தைகளின் பணத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த ஆண்டு ஆசியாவின் நாணயங்களிலேயே ரூபாய் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

எனினும் டர்க்கி உலோகங்களின் மீதான வரியை நீக்கும் முடிவை அமெரிக்கா அறிவித்த செய்திக்கு பின்னர், இன்றைய வர்த்தகத்தில் ஆறுதல் அளிக்கும் விதமாக லிராவால் ஏற்பட்ட இழப்புகள் சரிசெய்யப்பட்டது மற்றும் தற்போது டாலருக்கு நிகரான லிராவின் மதிப்பு 5.98 ஆக இருக்கிறது.

 

13 மாத உயர்வை தொட்ட டாலர் மதிப்பு:

கடந்த புதனன்று, 6 முக்கிய நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு மிகவும் வலுப்பெற்று, 13 மாத உச்சத்தைத் தொட்டு 96.984ஆக இருந்தது. எனினும் இன்றைய வர்த்தகத்தில் மீண்டும் 0.1% குறைந்து 96.756 ஆக இருந்தது. டாலரின் மதிப்பு குறிப்பிடத்தக்க வலுப்பெற்றதுக்குக் காரணத்தைப் பிரபல வர்த்தக நாளிதழ் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்த புதிய வர்த்தகக் கொள்கையில், இரும்பு அலுமினியம் உள்ளிட்ட சில டர்க்கீஸ் இறக்குமதி பொருட்களுக்கு வரி விதித்ததே ஆகும் எனக் குறிப்பிடுகிறது.

நாணய போருக்கு மத்தியில் பாதுகாப்பு கோரும் நாணயங்களுக்குப் புதிதாக உருவான தேவை:

வளர்ந்துவரும் சந்தைகளின் பணத்தில் ஏற்பட்ட தற்போதைய வீழ்ச்சி மற்றும் டாலர், ஸ்விஸ் ப்ராங்க் மற்றும் யென் போன்ற பாதுகாப்பான நாணயங்கள் போன்று இந்திய ரூபாய்க்கான தேவையும் அதிகரித்து வருகிறது. ஏனெனில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய ரூபாயை தங்களின் இந்திய சொத்துக்கள் மீதான நிலைக்கு வேலியாகப் பயன்படுத்துகின்றனர்.

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் மூலதனம் வெளியேறுதல்:

ஆகஸ்ட் 1 முதல் 14 வரையிலான இருவார காலத்தில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் விற்ற மொத்த பங்குகளின் மதிப்பு ரூ1100.20 கோடி எனப் பங்குச்சந்தையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்தக் காலகட்டத்தில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மூலதன சந்தையில் மொத்தம் ரூ93.64கோடி முதலீடு செய்துள்ளனர்.

வர்த்தகப் பற்றாக்குறையில் பலவீனம்:

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த ஜூலை மாதம் 18பில்லியன் டாலர் அளவிற்கு அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் மற்றும் கடந்த 6 மாதங்களைக் காட்டிலும் தங்கம் இறக்குமதி 41% அதிகரித்ததாலும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.

Have a great day!
Read more...

English Summary

Reasons For Rupees Slump To Historic Low of 70.32 Versus US Dollar