மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பினை ஏற்றார் அருண் ஜேட்லி.. என்னென்ன சவால்கள் உள்ளன?

மத்திய அமைச்சரான அருண் ஜேட்லி 3 மாத ஓய்விற்குப் பிறகு மீண்டும் இன்று முதல் நிதி அமைச்சக பதவியினை மீண்டும் ஏற்க துவங்கினார். இந்திய ரூபாய் மதிப்புச் சரிவு, காங்கிரஸ் ஆட்சியினை விடக் குறைவான அளவில் தான் பாஜக ஆட்சியில் ஜிடிபி வளர்ச்சி உள்ளது என்று வெளியான தரவு போன்ற சவால்களை அருண் ஜேட்லி சந்திக்க உள்ளார்.

பொருளாதார வளர்ச்சி

2011-2012-ல் காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டதாகவும், 10 ஆண்டு ஆட்சி சராசரி விகிதம் 8 சதவீதமாக இருந்ததாகவும், பாஜகவின் 4 வருட ஆட்சியில் இதுவே 7.3 சதவீதமாகச் சரிந்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.

சிறு நீரக அறுவை சிகிச்சை

அருண் ஜேட்லிக்கு சென்ற மோ மாதம் சிறு நீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ஓய்வில் இருந்து வந்தார். எனவே தற்காலிக நிதி அமைச்சர் பொறுப்பினை ரயில்வே அமைச்சரான பியூஷ் கோயல் நிர்வகித்து வந்தார்.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி திரும்பக் குணமடைந்து வந்ததை அடுத்துக் குடியரசு தலைவருக்கு அருண் ஜேட்லியை நிதி அமைச்சராக நியமிக்கவும் வியாழக்கிழமை மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் அவையில் அருண் ஜேட்லி ஒரு மூத்த அமைச்சர் ஆவார். 2014-ம் ஆண்டு முதல் நிதி அமைச்சர் அருன் ஜேட்லி இந்தப் பதவியினை வகித்து வருகிறார்.

எனவே இன்று காலை 11 மணி முதல் ராஷ்ட்டிரபதி பவனின் வடக்குப் பிளாக்கில் இருந்து நிதி அமைச்சர் பணிகளைத் துவங்கியுள்ளார்.

 

Have a great day!
Read more...

English Summary

Arun Jaitley returns as finance minister, falling rupee his top concern