தமிழ் நாட்டில் ரூ.37,000 கோடி முதலீடு செய்யும் ஐஓசி.. வேலை வாய்ப்பு அதிகரிக்குமா?

இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் தமிழ் நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 7,112 கோடி ரூபாயினை அடுத்த மூன்று ஆண்டுகளில் முதலீடு செய்ய உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.

ஐஓசி மட்டும் இல்லாமல் அதன் குழு நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷனும் இணைந்து தமிழ் நாட்டில் 37,112 கோடி ரூபாயினை முதலீடு செய்ய உள்ளது.

முதற்கட்ட முதலீடு

7,112 கோடி ரூபாய் முதலீடுகளானது பைப்லைன்களை அதிகப்படுத்துவது, கட்டுமான பணிகள், பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களை நிர்வகிக்கக் கூடுதல் வசதிகள் போன்றவை அடங்கும்.

சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன்

நரிமனம்மில் உள்ள சென்னை பெட்ரோலியத்திற்க்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் அளவினை 9 மில்லியன் டன்னாக அதிகரிக்க 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளனர்.

எரிவாயு விநியோகம்

அது மட்டும் இல்லாமல் இந்தியன் ஆயில் நிறுவனமானது சேலம் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களின் எரிவாயு விநியோக நெட்வொர்க்கிறாகவும் முதலீடு செய்ய உள்ளது.

என்னூர் எல்என்ஜி டெர்மினல்

என்னூர் எல்என்ஜி டெர்மினலில் இருந்து பல்வேறு இடங்களுக்குப் பைப்லைன் மூலம் பெட்ரோலிய பொருட்களைக் கொண்டு செல்வதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது.

மறுபக்கம் என்னூர் ல்என்ஜி டெர்மினல் திட்டத்திற்காக டிசம்பர் மாதம் கூடுதலாக 5,151 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

வேலை

இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் கோடி கணக்கில் தமிழ் நட்டில் முதலீடு செய்ய உள்ள நிலையில் அதன் மூலம் எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்ற விவரங்களை தெரிவிக்கவில்லை.

Have a great day!
Read more...

English Summary

Indian Oil Corporation to invest Rs 37,000 cr in Tamil Nadu