உலகத்தை மாற்றிய நிறுவனங்கள் ஃபார்ச்யூன்பட்டியலில் முதல் இடத்தினைப் பிடித்த ஜியோ..!

ஃபார்ச்யூனின் உலகை மாற்றிய நிறுவனங்கள் பட்டியலில் சர்வதேச அளவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதல் இடத்தினைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலானது நிறுவனத்தின் லாபம், இலக்கு, மக்கள் சமுகப் பிரச்சனைக்கு உதவுதல் போன்றவற்றைப் பொருத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜியோவை தொடர்ந்து பார்மா நிறுவனமான மெர்க் மற்றும் பாங்க் ஆப் அமெரிக்கா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் இருந்து இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

எனவே ஃபார்ச்யூனின் உலகை மாற்றிய நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள டாப் 10 நிறுவனங்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ

ஃபார்ச்யூன் உலகை மாற்றிய நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ முதல் இடத்தினைப் பிடித்துள்ளது. ஜியோ சேவை பயன்பாட்டிற்கு வந்த பிறகு இந்தியாவின் தரவு பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் போட்டியாளர்களும் இதற்கு இணையான விலையில் சேவைகளை அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

மஹிந்தரா & மஹிந்தரா

இந்தியாவில் இருந்து ஜியோ மட்டும் இல்லாமல் இந்தப் பட்டியலில் மஹிந்தரா & மஹிந்தரா நிறுவனம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் மஹிந்தரா நிறுவனம் 14,285 மில்லியன் டாலர் வருவாய் உடன் 23-வது இடத்தினைப் பிடித்துள்ளது.

மெர்க்

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மெர்க் பார்மா நிறுவனம் உயிர் கொள்ளியான எபோலா வைரஸ்க்கு எதிரான மர்ந்தை கண்டுபிடித்து அதைல் வெற்றி அடந்த காரணத்திற்காக இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

பாங்க் ஆப் அமெரிக்கா

பாங்க் ஆப் அமெரிக்கா நிறுவனம் ‘பசுமை பத்திரம்' என்ற திட்டத்தினை அறிமுஙம் செய்து அதன் கீழ் காலநிலை-பாதுகாப்புத் திட்டங்களுக்கு நிதி அளித்து உதவி வருகிறது.

இண்டிடெக்ஸ்

பாதுகாப்பான முறையில் ஆடைகள் தயாரித்து விற்று வரும் இண்டிடெக்ஸ் நிறுவனம் 4-ம் இடத்தினைப் பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் தான் ஜாராவாகும்.

அலிபாபா குழுமம்

சீனாவின் அலிபாபா குழுமம் கிராமப்புற சீனாவை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. உள்ளூரில் உள்ள ரெஸ்டாரண்ட், எரிவாயு நிலையம் மற்றும் கடைகளை வாடிக்கையாளர்களுக்கு எளிமையாகக் கொண்டு செல்ல அலிபாபா உதவி வருகிறது.

கோர்கெர்

அமெரிக்க உணவு தயாரிப்பு நிறுவனமான மளிகை பொருட்களைப் பெரும் அளவில் விற்று வரும் நிலையில் 2025-ம் ஆண்டுக்குள் தேவையில்லா கழிவுகளைக் குறைக்கம் வகையில் செயல்பட்டு வருகிறது.

சைலெம்

உலகின் பாதுகாப்பான நீர் வழங்கல் திட்டத்திற்கு ஏற்ற வகையிலான பைப் தொழில்னுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது.

ஏபிபி

எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வரும் நிலையில் ரோபிட்டிக்ஸ் நிறுவனமான ஏபிபி உலகம் முழுவதும் 7,000 சார்ஜிங் மையங்களை அமைத்துள்ளது. இதன் மூலம் 7 ஆண்டுகளில் 2 மில்லியன் கேலன் எரிவாயு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

வெயிட் வாட்செர்ஸ் இண்டர்னேஷனல்

உடல் பருமன், உணவு மற்ற முறை, உடற் பயிற்சி போன்றவற்றை அதிகரித்து டையட் மற்றும் பேக்கெஜ் உணவுகள் எதிராக இந்த நிறுவனம் செயல்பட்டு 1.3 பில்லியன் டாலர் வணிகத்தினைப் பெற்று வருகிறது.

Have a great day!
Read more...

English Summary

Mukesh Ambani's Reliance Jio tops Fortune Change the World list, click to know About M&M