டெஸ்லா போட்டியாக எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்த AK-47 உற்பத்தியாளர்..!

ரஷ்ய ஆய்த உற்பத்தி நிறுவனமான, AK-47 உற்பத்தியாளருமான கிளாஷ்னிக்கோவ் வியாழக்கிழமை எலன் மஸ்க்கின் டெஸ்லா போட்டியாகப் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

CV-1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய எலக்ட்ரிக் காரினை மாஸ்கோவில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்தக் கார் 1970-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இஸ் கோம்பி வடிவமைப்பில் உள்ளது.

எலக்ட்ரிக் சூப்பர் கார்

வெளிர் நீல வண்ணத்தில் கிளாஷ்னிக்கோவ் இந்த எலக்ட்ரிக் காரினை அறிமுகம் செய்த நிலையில் இதனை எலக்ட்ரிக் சூப்பர் கார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

350 கிலோ மீட்டர் பயணம்

கிளாஷ்னிக்கோவ் CV-1 காரானது ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால் 350 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தி கார்டியன்

உலகளாவிய எலக்ட்ரிக் கார் சந்தையில் கிளாஷ்னிக்கோவ் CV-1 மிகப் பெரிய இடத்தினை எட்டும் என்றும் தி கார்டியன் தெரிவித்துள்ளது.

பிற தயாரிப்புகள்

கார் உற்பத்தியில் புதிய பிராண்டாகக் கிளாஷ்னிக்கோவ் அறிமுகம் ஆகும் நிலையில் இதற்குக் குன்பு ஆயுதங்கள் என்றில்லாமல் சொந்த ஆடை மற்றும் பிற பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

விமர்சனம்

சில வாரங்களுக்கு முன்பு கிளாஷ்னிக்கோவ் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்ட ‘ஐகோரெக்' எனப்படும் போர் ரோபோ ஒன்றை அறிமுகம் செய்து ஆன்லைனில் விமர்சிக்கப்பட்ட நிலையில் பல மீம்ஸ்களுக்கு வித்திட்டது.

Have a great day!
Read more...

English Summary

AK 47 maker Kalashnikov unveils new electric car to rival Elon Musk’s Tesla