அதானியிடம் தோற்றுப்போன பாபா ராம்தேவ்..!

ருச்சி சோயா நிறுவனம் 12,000 கொடி ரூபாய் கடனில் சிக்கி தவித்து வரும் நிலையில் அதன் சமையல் எண்ணெய் பிரிவை 6,000 கொடி ரூபாய் கொடுத்து அதானி வில்மர் வாங்க உள்ளது.

என்ன ஆனாலும் சரி ருச்சி சோயா நிறுவனத்தினைப் பாபா ராம்தேவின் பதஞ்சலி வாங்கியே தீரும் என அதன் தலைமை செயல் அதிகாரியான ஆச்சர்யா பாலகிருஷ்ணா தெரிவித்து இருந்தார்.

ஆதரவு

அதானி வில்மர் கோரிய தோகைக்கு ருச்சி சோயா நிறுவனத்தின் கிரெடிட்டர்ஸ் குழுவில் உள்ள 96 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம்

இதனைத் தொடர்ந்து தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்திடம் விற்பனை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி கோரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதானி குழுமம்

அதானி குழுமம் ஏற்கனவே ஃபார்ச்யூன் என்ற பிராண்டின் கீழ் சமையல் எண்ணெய்யினை விற்பனை செய்து வரும் நிலையில் பதஞ்சலி நிறுவனமும் ருச்சி சோயா நிறுவனத்தினை வாங்க கடைசி நிமிடம் வரை முயற்சி செய்தது.

ஏலம்

அதானி வில்மர் ருச்சி சோயா நிறுவனத்தினை 6,000 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளதாகவும், பதஞ்சலி 5,700 கோடி ரூபாய் அளிக்க இருந்ததாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து அதானி வில்மர் மற்றும் பதஞ்சலி நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களைப் பெற முடிவில்லை.

 

பதஞ்சலி

பதஞ்சலி நிறுவனத்திற்கு ஜூலை மாதம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அதானி வில்மரை விடக் கூடுதலான விலைக்கு ஏலத்தில் பங்கேற்க ஸ்விஸ் சவால் ஏன்ற பெயரில் அனுமதி வழங்கிய நிலையில் அதற்கான நடவடிக்கையினை எடுக்காமல் அதானிக்கு எப்படி அளிக்கலாம் என்று விளக்கம் கேட்டு தாமதப்படுத்தி வந்தது எனவும் கூறப்படுகிறது.

ருச்சி சோயா

ருச்சி சோயா நிறுவனத்திற்கு 12,000 கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில் நியூட்ரெல்லா, மஹாகோஷ், சன் ரிச், ருச்சி ஸ்டார் மற்றும் ருச்சி கோல்டு கீழ் உற்பத்தி ஆழைகள் உள்ளன.

Have a great day!
Read more...

English Summary

Baba Ramdev Lost Ruchi Soya On Bid With Adani