இந்தியாவில் இந்த நிறுவனத்தில் தான் அதிகக் கோடீஸ்வரர் ஊழியர்கள் உள்ளனர்!

உலகம் முழுவதிலும் அதிகச் சம்பளம் பெறும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் என்றால் பெரும்பாலும் அவர்கள் ஐடி துறையில் தா இருப்பார்கள். அப்படி இந்தியாவின் டாப் ஐடி நிறுவன தலைமை செயல் அதிகாரிகளில் யாருடையைச் சம்பளம் அதிகம் என்று வியாழக்கிழமை தகவல் வெலியானது.

இந்தப் பட்டியலில் முதன் முறையாக எச்சிஎல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஜயகுமார் முதல் இடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். எனவே பிற ஐடி நிறுவன தலைவர்களின் சம்பளம் மற்றும் பிற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

விஜயகுமார்

எச்சிஎல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஜயகுமார் 2016-ம் ஆண்டு இந்தப் பதவியினை ஏற்கும் போது 7.06 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த நிலையில் 2017-2018 நிதி ஆண்டில் இவரது சம்பளம் ஆண்டுக்கு 33.13 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் இது முழு ஆண்டுச் சம்பளம் இல்லை. எனவே வரும் ஆண்டு இவரது சம்பளம் பல அடங்கு அதிகரிக்கும்.

இந்தியாவின் டாப் 4 ஐடி நிறுவனங்களில் இவரது சம்பளம் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரஜேஷ் கோபிநாதன்

டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் அவர்கள் ஆண்டுக்கு 12 கோடி ரூபாயினைச் சம்பளமாகப் பெற்று வருகிறார்.

சலில் பாரேக்

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள சலில் பாரேக்-க்கு 34.45 கொடி ரூபாய் ஆண்டுச் சம்பளம் என்றும் தரவுகள் கூறுகின்றன.

அபிதாலி நீமுச்வாலா

விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அபிதாலி நீமுச்வாலாவின் சம்பள 2018 நிதி ஆண்டில் 34 சதவீதம் உயர்ந்து 18.2 கோடி ரூபாயாக உள்ளது.

சிபி குருஞானி

டெக் மஹிந்தராவின் தலைமை செயல் அதிகாரியான சிபி குருஞானியின் சம்பளம் 2017-2018னிதி ஆண்டில் 146.19 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

ஷிவ் நாடார்

எச்சிஎல் நிறுவன தலைவரான ஷிவ் நாடார் 2017-2018 நிதி ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டினை விட 66.25 சதவீதம் குறைவாகவே சம்பளத்தினைப் பெற்றுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அதிகக் கோடிஸ்வரர்கள்

இந்தியாவின் 3-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமாக எச்சிஎல் நிறுவனம் வளர்ந்துள்ள நிலையில் 28 கோடீஸ்வர அதிகாரிகள் படைத்த நிறுவனமாகவும் உள்ளது.

Have a great day!
Read more...

English Summary

HCL CEO Tops Salary List, Tech Giant Has Many More Crorepati Employees