மகிழ்ச்சி.. இனி கூகுள், ஆப்பிள் உட்பட இந்த 12 நிறுவனங்களில் பணிபுரிய டிகிரி தேவையில்லை..!

வேலை தேடல் இணையதளமான கிளாஸ்டோர் நிறுவனமானது குறிப்பிட்ட 15 நிறுவனங்களில் பணிபுரிய டிகிரி எனப்படும் பட்டம் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பல நிறுவனங்களின் அலுவலகங்கள் இந்தியாவில் உள்ள நிலையில் விரைவில் இங்கு டிகிரி இல்லாத திறமை உள்ளவர்களைப் பணிக்கு எடுக்கப்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அன்மையில் தமிழ் நாட்டு அரசும் 12-ம் வகுப்பு முடித்த உடனே வேலை கிடைக்கும் அளவிற்குப் பாட திட்டங்கள் மாற்றி அமைக்கும் என்று தெரிவித்தும் குறிப்பிடத்தக்கது.

எனவே எந்த நிறுவனங்களில் டிகிரி இல்லாமல் திறமை அடிப்படையில் வேலைக்குச் சேர முடியும் என்று பட்டியலை இங்குப் பார்க்கலாம்.

கூகுள்

கூகுள் நிறுவனத்தில் டிகிரி இல்லாமல் ஊழியர்கள் பணிக்கு எடுக்கப்படும் நிலையில் தயாரிப்பு மேலாளர், ஆட்சேர்ப்பாளர், மென்பொருள் பொறியாளர், தயாரிப்பு மார்க்கெட்டிங் மேலாளர் போன்ற பணிகளுக்கு மவுண்டெயின் வியூவ், சிஏ, ஆஸ்டின், டெக்சாஸ், சான் பிரான்சிஸ்கோ போன்ற இடங்களில் காலியிடம் உள்ளன.

யர்னஸ்ட் & யங்

யர்னஸ்ட் & யங் நிறுவனத்தில் டிகிரி இல்லாமல் ஊழியர்கள் பணிக்கு எடுக்கப்படும் நிலையில் அனுபவ மேலாண்மை மேலாளர், வரிச் சேவைகள் போன்ற துறைகளில் காலியிடங்கள் உள்ளன.

பெங்குயின் ரேண்டம் ஹவுஸ்

பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்திலும் ஊழியர்களை டிகிரி இல்லாமல் பணிக்கு எடுக்கும் நிலையில் விற்பனை வடிவமைப்பாளர், விளம்பர உதவியாளர், நிதி மேலாளர், தயாரிப்பு உதவியாளர் போன்ற பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளன.

கோஸ்ட்கோ வோல்சேல்

கோஸ்ட்கோ வோல்சேல் நிறுவனத்தில் டிகிரி இல்லாமல் ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் நிலையில் கேஷியர், ஸ்டாக்கர், பார்மஸி விற்பனை உதவியாளர், பேக்கரி ரேப்பர் போன்ற பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளன.

வோல்சேல் ஃபுட்ஸ்

வோல்சேல் ஃபுட்ஸ் நிறுவனத்தில் டிகிரி இல்லாமல் ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் நிலையில் மளிகை பொருட்கள் பிரிவு, பேக்கரி பிரிவு மற்றும் பிற பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

ஹில்டன்

ஹில்டன் நிறுவனத்தில் டிகிரி இல்லாமல் பணிபுரிய நிகழ்ச்சி மேலாளர், அலுவலக முகப்பு மேலாளர், வீட்டு மேலாளர், ஹோட்டல் மேலாளர் போன்ற பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளன.

பப்ளிக்ஸ்

பப்ளிக்ஸ் நிறுவனத்தில் டிகிரி இல்லாமல் மருந்தகம், சில்லறை செட் அப் ஒருங்கிணைப்பாளர், பராமரிப்புத் தொழில்நுட்பம் போன்ற பணிகளுக்கு ஆட்கள் எடுப்பதாகக் கூறப்படுகிறது.

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்திலும் டிகிரி இல்லாமல் வடிவமைப்புச் சரிபார்ப்பு பொறியாளர், பொறியியல் திட்ட மேலாளர், ஐபோன் வாங்குபவர் போன்ற பணிகளுக்கு ஆட்களைப் பணிக்கு எடுக்கின்றார்களாம்.

ஸ்டார்பக்ஸ்

உலகின் மிகப் பெரிய காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸிலும் பாரிஸ்டா, ஷிஃப்ட் மேற்பார்வையாளர், கடை மேலாளர் போன்ற பணிகளுக்கு டிகிரி இல்லாமல் ஊழியர்களைப் பணிக்கு எடுக்கின்றனர்.

நார்டஸ்ட்ரோம்

நார்டஸ்ட்ரோம் நிறுவனத்திலும் சில்லறை விற்பனை, க்ளினிங், பங்கு மற்றும் ஃபுல்ஃபில்மெண்ட், பார்டெண்டர் போன்ற பணிகளுக்கு டிகிரி இல்லாமல் பணிக்கு எடுக்கின்றனர்.

ஐபிஎம்

நிதி தடுப்பு பொறியாளர், முன்னணி ஆட்சேர்ப்பாளர், ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள் தொழிலாளர்கள் ஆகிய பணிகளுக்கு ஆட்களை டிகிரி இல்லாமல் எடுக்கின்றனர்.

பாங்க் ஆப் அமெரிக்கா

வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி, ஆய்வாளர், நிர்வாகி உதவியாளர் போன்ற பணிகளுக்கு டிகிரி இல்லாமல் வேலைக்கு ஆட்களை எடுக்கின்றனர்.

Have a great day!
Read more...

English Summary

No college degree? To Work In This Top 12 Companies