சியோமி கார்ப்பரேஷன் காலாண்டு முடிவுகள் வெளியீடு.!

சியோமி கார்ப்பரேஷன் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. நிறுவன வருவாய் 68 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் 5.4 பில்லியன் டாலர் முதலீடுகளைப் பெற்றபிறகு இந்த நிறுவனம் வெளியிடும் முதல் காலாண்டு முடிவுகள் இதுவாகும். ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 14.7 பில்லியன் யுவானாக (2.1 பில்லியன் டாலர்) உள்ளது. கடந்த ஆண்டில் நிறுவனம் 12 பில்லியன் யுவான் அளவுக்கு நஷ்டம் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் வருவாய் 45.2 பில்லியன் யுவானாக உள்ளது.

மாற்றம்

அதிக வளர்ச்சியுடைய இணைய நிறுவனமாக சியோமியை மாற்ற முயல்வதாக இணை நிறுவனர் லெய் ஜூன் தொடர்ந்து கூறிவந்தார். இருப்பினும் நிறுவனத்தின் இணைய சேவைப் பிரிவு அளவில் சிறியதாகவும், காலாண்டு வருவாயில் 9 சதவீதம் மட்டுமே பங்களிப்பதாகவும் இருந்தது. ஆனால் இந்தப் பிரிவின் வலுவினை நம்பிய ஜியோமி நிறுவனம், டென்சென்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களைவிட அதிக மதிப்பில் தனது பொதுப் பங்குகளை வெளியிட்டது. இதன்விளைவாக ஜூன் காலாண்டில் இணைய சேவைப் பிரிவின் வருவாய் 64 சதவீதம் அதிகரித்து 4 பில்லியன் யுவானாக உள்ளது. விளம்பரங்கள் மூலம் இந்த வருவாய் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி

ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய முடிவுகளை சியோமி வெளியிட்டிருப்பதாக இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கையுவான் கேப்பிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிராக் சில்வர்ஸ் கூறினார். இருப்பினும் தனது தொழில் அமைப்பு குறித்து சியோமி கவனம் செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டார்.

ஸ்மார்ட்போன்

நிறுவனத்தின் மொத்த வருவாயில் 3-ல் 2 பங்கு வருவாயை ஈட்டித்தரும் ஸ்மார்ட் போன் பிரிவில் மிகப்பெரிய சவால்கள் எதையும் சியோமி சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீன சந்தை

சீன சந்தையைப் பொறுத்தவரை தனது சந்தை மதிப்பை மற்ற நிறுவனங்களைவிட மெதுவான வேகத்தில் சியோமி அதிகரித்துவருகிறது. வீடியோ, இசை மற்றும் நிதிச் சேவை சார்ந்த செயலிகளை சீனாவில் சியோமி அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இணையதள நிறுவனம்

இணையதள நிறுவனமாக ஜியோமி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் வன்பொருள் அமைப்புகளின் மூலம் பெரிய அளவில் லாபம் ஈட்டமுடியும் என்றும் சிசிபி இன்டர்நேஷனல் நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் காலாண்டு

இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் வெளிநாட்டு வருவாய் 2 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்து 16.4 பில்லியன் யுவானாக உள்ளது. ஓப்போ நிறுவன ஸ்மார்ட் போன்கள் ஜியோமி நிறுவனத்துக்கு உள்ளூர் அளவிலான பெரிய போட்டியாளர்களாக இருந்துவருகின்றன. விரைவில் ஜியோமி நிறுவனத்தின் உற்பத்தியகங்கள் இந்தியா, ரஷ்யா போன்ற சந்தைகளிலும் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Have a great day!
Read more...

English Summary

Xiaomi's quaterly reports