ஐஆர்சிடிசி-ல் ரயில் டிக்கெட் புக் செய்தால் 10% வரை சலுகை! எப்படி?

ரயில் பயணம் செய்பவர்களில் ல்பலர் ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட்களைப் புக் செய்து பயணம் செய்து இருப்பீர்கள். தற்போது ரயில் டிக்கெட் புக் செய்யும் போது பல வகைகளில் சலுகைகளை எல்லாம் பெற முடியும் என்றும் உங்களுக்குத் தெரியுமா?

இந்தச் சலுகைகள் எல்லாம் பேடிஎம், மோபிகுவிக் போன்ற டிஜிட்டல் வாலெட்கள் மூலம் பணம் செலுத்தும் போது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோபிகுவிக்

மோபிகுவிக் வாலெட்டில் விழா காலச் சலுகையாக ரயில் டிக்கெட்களுக்கு 10 சதவீதம் வரை தள்ளூபடி அளிக்கப்படுகிறது. ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலிகளில் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது பணம் செலுத்த மோபிகுவிக் செயலியினைத் தேர்வு செய்யும் போது இந்தச் சலுகைகளைப் பெற முடியும்.

இந்தத் தள்ளுபடியானது மோபிகுவிக்கின் சூப்பர்கேஷில் சேர்ந்து விடும். இதனை அடுத்த முறை டிக்கெட் புக் செய்யும் போது அல்லது பிற பரிவர்த்தனைகளின் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

பேடிஎம் மால்

மோகுவிக் மட்டும் இல்லாமல் பேடிஎம் மாலும் 100 ரூபாய் வரை ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் புக் செய்யும் போது கேஷ்பேக் அளிக்கிறது. இதற்குப் பணம் செலுத்தும் போது 'TR100' என்ற குறியீட்டினை உள்ளிடவேண்டும்.

போன்பே

பிளிப்கார்ட் நிறுவனத்தின் போன்பே செயலி மூலம் ஐஆர்சிடிசி தளம் அல்லது செயலியில் டிக்கெட் புக் செய்யும் போது பணம் செலுத்தும் போது 2 பரிவர்த்தனைகளுக்கு 100 ரூபாய் வரை கேஷ்பேக் பெற முடியும்.

சலுகை

ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் புக் செய்து பணம் செலுத்தும் போது வாலெட் மூலம் பணம் செலுத்தும் முறையினைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதில் சாதரான வாலெட் பரிவர்த்தனை மற்றும் சலுகை பரிவர்த்தனை என இரண்டு தெரிவுகள் காணப்படும். சலுகைகள் தெரிவை தேர்வு செய்யும் போது தேர்வு செய்யப்படும் சலுகை செயலியில் கணக்கு வைத்து இருக்க வேண்டும்.

பின்னர்க் கட்டணம் செலுத்துதல்

ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட்களை இப்போது புக் செய்து பின்னர்க் கட்டணத்தினைச் செலுத்தும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் சேவையின் கீழ் டிக்கெட்களைப் புக் செய்த 14 நாட்களில் கட்டணத்தினைச் செலுத்தினால் போதுமானது.

Have a great day!
Read more...

English Summary

How To Get 10% Discount On Rail Tickets Booking Through IRCTC website