இந்தியாவின் முதல் பயோ ஃபியூல் விமானத்தினை பரிசோதனை செய்ய இருக்கும் ஸ்பைஸ்ஜெட்..!

விமான எரிபொருள் விலை உயர்வால் இந்திய விமான நிறுவனங்கள் பெறும் அளவில் கடனில் சிக்கி தவித்து வரும் போது அதற்குத் தீர்வு கான ஸ்பைஸ்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமானது திங்கட்கிழமை இந்தியாவின் முதல் பயோ ஃபியூல் விமானத்தினைச் சோதனை செய்ய உள்ளது.

சோதனை

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் Q400 விமானத்தில் பயோ ஃபியூல் மற்றும் விமான எரிபொருள் என்று இரண்டையும் கலந்து டேராடூனில் திங்கட்கிழமை இந்தச் சோதனை நிகழ்த்த உள்ளனது.

வெற்றி அடைந்தால்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இந்த முயற்சி வெற்றி அடைந்தால் டேராடூன் ட் டெல்லி இடையில் பயோ ஃபியூல் மூலம் விமானச் சேவை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

உற்பத்தி

ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்கான இந்தப் பயோ ஃபியூல் எரிபொருளானது டேராடூனில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆ பெட்ரொலியம் உருவாக்கியுள்ளது. இந்த எரிபொருளினை விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் இந்திய ஆயில் நிறுவனம் இரண்டும் ஆய்வு செய்து அனுமதி அளித்துள்ளன.

சோதனை விமானம்

இது சோதனை விமானம் என்பதால் பயணிகள் யாரும் இதில் செல்ல மாட்டார்கள் என்று விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகின் முதல் பயோ ஃபியூல் விமானம்

உலகின் முதல் பயோ ஃபியூல் விமானம் விர்ஜின் அட்லாண்ட்டிக் ஏர்லைன்ஸ் கீழ் லண்டன் - அம்ஸ்டெர்டம் இடையில் சோதனை செய்யப்பட்டு வெற்றிப் பெற்றது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கமானது உலகம் முழுவதும் இந்தப் பயோ ஃபியூல் விமானச் சேவையானது பயன்பாட்டிற்கு வர வேண்டும் 2015-ம் ஆண்டுத் தெரிவித்தது.

தோல்வி

இந்தியாவில் இதே போன்ற ஒரு முயற்சி 2010-ம் ஆண்டுச் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டு அது தோல்வியில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

SpiceJet To Test India's First Biofuel Aircraft