ஏர்ஏசியா அதிரடி.. 1,199 ரூபாய்க்கு விமானப் பயணம்!

பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர்ஏசியா உள்நாட்டு விமானப் பயணங்களை 1,199 ரூபாய்க்குச் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. இந்தச் சலுகை விலை டிக்கெட்களை airasia.com இணையதளத்தில் 2018 செப்டம்பர் 2 வரை புக் செய்து 2019 பிப்ரவரி 17-ம் தேதி வரை பயணச் செய்யலாம்.

ஏர்ஏசியாவின் இந்தச் சலுகை கீழ் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, அம்ரிஸ்டர், ஜெய்ப்பூர், ஹைதராபாத் மற்றும் பிற வழித்தடங்களில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ரூ.1,199 சலுகை

ஏர்ஏசியாவின் இந்த 1,199 ரூபாய் சலுகை விலையில் பெங்களூரு - ஹைதராபாத் வழித்தடத்தில் பயனம் செய்யலாம்.

பிற வழித்தட சலுகைகள்

புவனேஷ்வர் - கொல்கத்தா செல்ல 1,499 ரூபாய் என்றும், புவனேஷ்வர் - ஹைதராபாத் செல்ல 1,999 ரூபாய் என்றும், ராஞ்சி - கொல்கத்தா செல்ல 1,899 ரூபாய் என்றும், கொச்சி - பெங்களூரு செல்ல 1,359 ரூபாய் என்றும், கொல்கத்தா - விஷாகபட்டினம் செல்ல 1,899 ரூபாய் என்றும், கோவா - பெங்களூரு செல்ல 1,699 ரூபாய் என்றும், கவுகாத்தி - இம்பால் செல்ல 1,399 ரூபாய் என்றும், இம்பால் - கொல்கத்தா செல்ல 1,799 ரூபாய் என்றும், புனே - பெங்களூரு செல்ல 1,599 ரூபாய் என்றும், பெங்களூரு - கொச்சி செல்ல 1,359 ரூபாய் என்றும் பல வழித்தடங்களில் சலுகையை வழங்கியுள்ளது.

விதிகள்

ஏர்ஏசியா சலுகை விலை டிக்கெட்களைக் கிரெடிடி, டெபிட் அல்லது பிற கார்டுகள் மூலம் புக் செய்தால் செயலாக்கக் கட்டணம் திருப்ப வழங்கப்பட மாட்டாது. குறைந்த டிக்கெட்கள் மட்டுமே இந்தச் சலுகை விலையில் கிடைக்கும். ஒரு வழி பயணத்திற்கு மட்டுமே இந்தச் சலுகை. மாற்றும் வழிகளில் பயணம் செய்யத் திருத்தம் செய்துகொள்ளலாம்.

பிற நிறுவனங்கள்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 2,399 ரூபாயில் விமானப் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. அதே நேரம் இண்டிகோ நிறுவனமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணக் கட்டணங்களுக்கு 15 சதவீதம் வரை சலுகையை அறிவித்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

AirAsia India Offers Flight Tickets From Rs. 1,199. Details Here