ரிலையன்ஸ் நேவல் & இஞ்சினியரிங் நிறுவனங்களின் இயக்குனர் பதவிகளில் இருந்து விலகிய அனில் அம்பானி!

ரிலையன்ஸ் நேவல் மற்றும் இஞ்சினியரிங் நிறுவனங்களின் இயக்குனர்கள் பதவிகளில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்ததாக ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

நிறுவன சட்டப் பிரிவு 165-ன் கீழ் 10 நிறுவனங்களுக்கு அதிகமாக ஒருவர் பொது நிறுவனங்களில் இயக்குனராக இருக்கக் கூடாது என்பதால் அந்தப் பதவிகளில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

செபி

ரிலையன்ஸ் நேவல் மற்றும் இஞ்சினியரிங் நிறுவனங்களில் இயக்குனர்கள் பதவிகளில் இருந்து அனில் அம்பானி விலகி இருப்பது குறித்து இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபிக்கும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கப்பல் கட்டுப்பாட்டு வசதி

ரிலையன்ஸ் நேவல் மற்றும் இஞ்சினியரிங் லிமிட்டட் தான் இந்தியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த கப்பல் கட்டுப்பாட்டு வசதி உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்திய அரசுக்கான போர் கப்பல் உற்பத்திக்கான அனுமதியினையும் பெற்றுள்ளது.

இஞ்சினியரிங் கட்டுமான நிறுவனம்

அது மட்டும் இல்லாமல் ரிலையன்ஸ் நேவல் மற்றும் இஞ்சினியரிங் லிமிட்டட் தான் இந்தியாவின் மிகப் பெரிய என்று மட்டும் இல்லாமல் உலகின் மிகப் பெரிய இஞ்சினியரிங் கட்டுமான நிறுவனங்களிலும் ஒன்று ஆகும்.

பங்குகள்

அனில் அம்பானி இயக்குனர்கள் பதவியில் இருந்து விலகியதை அடுத்துத் திங்கட்கிழமை ரிலையன்ஸ் நேவல் பங்குகள் 0.81 புள்ளிகள் என 4.99 சதவீத சரிந்து 15.42 புள்ளியாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

Have a great day!
Read more...

English Summary

Anil Ambani resigns as Director, Reliance Naval and Engineering