இறக்குமதியாளர்களுக்கு ஓர் நற்செய்தி.. டிசம்பர் மாதம் ரூபாய் மதிப்பு 67-68 ஆக உயர வாய்ப்பு!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகஸ்ட் 16-ம் தேதி 70 ரூபாயாகச் சரிந்த நிலையில் அந்நிய செலாவணி சரியும் மற்றும் பணவீக்கம் போன்றவை உயரும் என்ற நிலை உருவாகியுள்ளது.

தற்போது இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்ததே காரணம் ஆகும். ஆனால் இது தாற்காலிகமானது தான் என்றும் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

செப்டம்பர்

செப்டம்பர் மாதம் ரூபாய் மதிப்பு 68 முதல் 69 ரூபாய்க்குள் இருக்கும் என்றும் எச்டிஎப்சி வங்கியின் முதன்மை பொருளாதார அதிகாரியான சாக்‌ஷி குப்தா தெரிவித்துள்ளார்.

துருக்கி

செப்டம்பர் மாதம் அமெரிக்க டாலர் மதிப்பு சரிய துவங்கும் என்றும் அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தாக்கம் நாணய சந்தையில் இருக்கும் என்றும் துருக்கி மீதான பொருளாதாரத் தடை போன்றவை சீராகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான்

அதே நேரம் நவம்பர் மாதம் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில் அதன் மீதான தாக்கமும் ரூபாய் மதிப்பினை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்பிஐ

அதே நேரம் 2019 தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில் ஆர்பிஐ ரூபாய் மதிப்பு விவகாரத்தில் தலையிட்டு அதனைச் சரி செய்ய முயலவும் வாய்ப்புகள் உள்ளது.

ரூபாய் மதிப்பு

எனவே டிசம்பர் மாதம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 67 முதல் 68 ரூபாய்க்குள் இருக்கம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி

ரூபாய் மதிப்பு சரியும் போது இறக்குமதி மீதான விலை உயரும், அந்நிய செலாவணி இருப்பு குறையும் என்றும் அது நாட்டின் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தில் பாதிப்பினை ஏற்படுத்துவது மட்டும் இல்லாமல் பெட்ரோல், டீசல் உட்படப் பல அத்தியாவசிய பொருட்கள் மீதான விலை உயரும்.

Have a great day!
Read more...

English Summary

Good news: Rupee to be at 67 to 68 per dollar by December