இந்திய விமான போக்குவரத்து துறையில் புதிய சாதனை.. பயோ ஃபியூல் திட்டம் வெற்றி!

விமான எரிபொருள் விலை உயர்வால் இந்திய விமான நிறுவனங்கள் பெறும் அளவில் கடனில் சிக்கி தவித்து வரும் போது அதற்குத் தீர்வு கான ஸ்பைஸ்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமானது திங்கட்கிழமை இந்தியாவின் முதல் பயோ ஃபியூல் விமானச் சோதனை ஓட்டத்தினை வெற்றிகரமாக நடத்தியது.

சோதனையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் Q400 விமானம் பயோ ஃபியூல் மற்றும் விமான எரிபொருள் என்று இரண்டையும் கலந்து டேராடூனில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.

வரவேற்பு

பயோ ஃபியூல் விமானம் டேராடூனில் இருந்து டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்த போது அதனை நித்தின் கட்காரி, சுரேஷ் பிரபு, தர்மேந்திர பிரதான், ஹர்ஷ் வர்தன் மற்றும் ஜெயந்த் சின்ஹா உள்ளிட்டவர்கள் வரவேற்று பூரிப்படைந்தனர்.

எளைட் கிளப்

இது வரை அமெரிக்கா மற்றும் ஆஸிதிரேலியாவில் மட்டுமே விமானப் போக்குவரத்தில் பயோ ஃபியூல் திட்டம் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் வளரும் நாடுகளில் இந்தியாவில் தான் முதலாவது ஆகும்.

உற்பத்தி

ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்கான இந்தப் பயோ ஃபியூல் எரிபொருளானது டேராடூனில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆ பெட்ரொலியம் உருவாக்கியுள்ளது. இந்த எரிபொருளினை விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் இந்திய ஆயில் நிறுவனம் இரண்டும் ஆய்வு செய்து அனுமதி அளித்துள்ளன.

சோதனை விமானம்

இது சோதனை விமானம் என்பதால் பயணிகள் யாரும் இதில் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் 75 சதவீத விமான எரிபொருளும், 25 சதவீதம் பயோ ஃபியூலும் சேர்க்கப்பட்டு இருந்தது.

கார்பன் உமிழ்வு குறையும்

விமான எரிபொருளில் பயோ ஃபியூல் சேர்க்கும் போது கார்பன் உமிழ்வு குறையும் என்றும் செலவுகள் குறையும் என்றும் பயணக் கட்டணம் குறையும் என்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

உலகின் முதல் பயோ ஃபியூல் விமானம்

உலகின் முதல் பயோ ஃபியூல் விமானம் விர்ஜின் அட்லாண்ட்டிக் ஏர்லைன்ஸ் கீழ் லண்டன் - அம்ஸ்டெர்டம் இடையில் சோதனை செய்யப்பட்டு வெற்றிப் பெற்றது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கமானது உலகம் முழுவதும் இந்தப் பயோ ஃபியூல் விமானச் சேவையானது பயன்பாட்டிற்கு வர வேண்டும் 2015-ம் ஆண்டுத் தெரிவித்தது.

தோல்வி

இந்தியாவில் இதே போன்ற ஒரு முயற்சி 2010-ம் ஆண்டுச் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டு அது தோல்வியில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

India Joins Elite Club, Successfully By Tests First Biofuel Flight