மோடி சொன்னதெல்லாம் சுத்தப்பொய்யா.. வேலை வாய்ப்பு வளர்ச்சி விகிதத்தில் சரிவு!

இந்தியாவில் கார்ப்பரேட் எனும் பெருநிறுவனங்களில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பு வளர்ச்சி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகச் சரிவடைந்துள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சேமநல நிதி அமைப்பில் பதிவு செய்தவர்களுடன் ஒப்பிடும்போது வேலை வாய்ப்பு வளர்ச்சி விகிதம் முரண்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

வேலைவாய்ப்பு வளர்ச்சி சரிவு

2017 ஆம் ஆண்டு 2,424 நிறுவனங்களில் 6 மில்லியன் பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அதேசமயம் 2007 ஆம் ஆண்டு வாக்கில் 1,033 நிறுவனங்களில் 3.3 மில்லியன் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். 2007 ஆம் ஆண்டில் பெருநிறுவனங்களில் 3,168 ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் 2,501 ஆகச் சரிவடைந்துள்ளது.

எல் அண்ட் டியில் வேலை

இதே காலகட்டத்தில் எல் அண்ட் டி அதிக எண்ணிக்கையிலான நபர்களை வேலைக்கு அமர்த்தியது. எடுத்துக்காட்டாக 2003 ஆம் ஆண்டில் 21,873 பேரும், 2014 ஆம் ஆண்டில் 54,579 பேரும் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அதேநேரம் 2017 ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பு எண்ணிக்கை 41,466 ஆகக் குறைந்தது.

மோசமான பாதிப்பு

செயில் நிறுவனத்தில் 2003 ஆம் ஆண்டில் 137,496 பேர் வேலை வாய்ப்பை பெற்றிருந்ததாகவும் , 2013 ல் 101,878 ஆகக் குறைந்து 2017 ல் 82,964 ஆகச் சரிவடைந்துள்ளது. எம்.டி.என்.எல் நிறுவனத்தில் 2003 ஆண்டில் 58,072 ஆக இருந்த வேலை வாய்ப்பு எண்ணிக்கை, 2017 ல் 27,919 ஆகக் குறைந்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தில் 2005 ஆம் ஆண்டு 7,827 பேர் வேலை வாய்ப்பு பெற்றிருந்தனர். 2013 ஆம் ஆண்டு 15,563 ஆக அதிகரித்து 2018 ஆம் ஆண்டு 8,453 ஆகச் சரிவடைந்துள்ளது.

படுமோசம்

மகேஷ் வியாசின் தரவுப்படி 2017 ஆம் ஆண்டில் 3,441 நிறுவனங்களில் 8.4 மில்லியன் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 2006-2010 ஆம் ஆண்டு 4 விழுக்காடாக இருந்த வேலை வாய்ப்பு வளர்ச்சி, 2013-2017 ஆம் ஆண்டுகளில் 0.75% என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தரவுகள் மாறுபடுகின்றன.

Have a great day!
Read more...

English Summary

Jobs in corporate India fell sharply over last decade, from around 5 to 6% per annum then to around 2 to3% today