பாதுகாப்புத்துறைக்கு 111 ஹெலிகாப்டர்கள் வாங்க 21,000 கோடி ஒதுக்கீடு!

இந்திய கடற்படை பயன்பாட்டுக்கு 111 ஹெலிகாப்டர் வாங்க முடிவு செய்துள்ள மத்திய அரசு 21 கோடி ரூபாயை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது.ஹெலிகாப்டர் உள்ளிட்ட தளவாடங்களைத் தருவிக்க 46,000 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்துள்ளது.

ஹெலிகாப்டர்கள் & ஆயுதங்கள்

பாதுகாப்புத்துறையின் கையகப்படுத்தும் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 21,000 கோடி ரூபாயில் 111 ஹெலிகாப்டர்கள் மற்றும் இன்னபிற ஆயுதங்களும் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறை

இதேபோல 24,879 கோடி ரூபாயில் பாதுகாப்புத்துறைக்குப் பயன்படுத்தப்படும் கொள்முதல் திட்டங்களுக்கும் இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 150 மில்லி மீட்டர் அளவுள்ள மேம்படுத்தப்பட்ட பீரங்கிகளை வாங்க 3,364 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

நடவடிக்கை

இந்திய எல்லைகளில் எதிரி நாட்டுப் படைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவ்வப்போது துப்பாக்கிச் சண்டைகள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஆயுதப்பற்றாக்குறை இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Modi govt Buy's 111 utility helicopters For Rs 21,0000 crore In Indian Navy