பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கோடி கணக்கில் கடன் பெற்றுவிட்டு அதனைத் திருப்பு செலுத்தாத 18 முதலைகள்!

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுவது என்பது அன்மை காலமாக அதிகரித்து வருவதைத் தடுக்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக விஜய் மல்லையா, நீரவ் மொடி, மேஹூல் சோக்ஸி உள்ளிட்டோருக்கு கடன் அளித்த ஏமார்ந்து வந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி சற்று மீண்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 25 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் வாங்கிவிட்டுக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் சராசரி நிலுவை தொகை 15.355 கோடியாக ஜூன் மாதம் இருந்த நிலையில் அது ஜூலை மாதம் 1.8 சதவீதம் சரிந்து 15.175 கோடியாக உள்ளது.

எனவே பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் அதிகக் கடன் பெற்று அதனைத் திருப்பிச் செல்லுத்தாதவர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. அவற்றை இங்குப் பார்ப்போம்.

வின்சம் டைமண்ட்ஸ் & ஜூவல்லரி

ஹரிஷ் மேதாவின் வின்சம் டைமண்ட்ஸ் & ஜூவல்லரி நிறுவனம் பஜ்சாப் நேஷ்னல் வங்கியில் 899.70 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறது.

ஃபார்எவர் பிரீசியஸ் ஜூவல்லரி & டைமண்ட்ஸ்

அகமதாபாத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபார்எவர் பிரீசியஸ் ஜூவல்லரி & டைமண்ட்ஸ் நிறுவனம் 747.97 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தொகையினைப் பஞ்சாப் நேஷ்னல் வங்கிக்குத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.

ஜூன் டெவலப்பர்ஸ்

ஜூன் டெவலப்பர்ஸ் நிறுவனம் 410.18 கோடி ரூபாயினைக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.

ஸ்ரீ சித்பாலி இஷ்பத்

ஸ்ரீ சித்பாலி இஷ்பத் 165.98 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

ராம்சரூப் நிர்மான் வைர்ஸ்

ராம்சரூப் நிர்மான் வைர்ஸ் நிறுவனம் 148.82 கோடி ரூபாய் நிலுவை தொகையினைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறது. அத மட்டும் இல்லாமல் ராம்சரூப் இண்டஸ்ட்ரிலிய கார்ப்ரேஷன் 133.20 கோடி ரூபாயும், ராம் சரூப் லோ உத்யோக் 129.34 கோடி ரூபாயும் கடன் பெற்று அதனைத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.

எஸ் குமார் நேஷன் வைட்

ஜவுளி நிறுவனமான எஸ் குமார் நேஷன் வைட் 146.82 கோடி ரூபாய் கடனை பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.

மெஹூவா மீடியா

நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மெஹூவா மீடியா நிறுவனமானது 104.86 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறது.

கேஜி காப்ரேஷன்

எலக்ட்ரிக்கல் நிறுவனமான கே ஜி கார்ப்ரேஷன் குஜராத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் 98.92 கோடி ரூபாய் கடனை பெற்று அதனைத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.

விஷால் எக்ஸ்போர்ட்ஸ் ஓவர்சீஸ்

டிரேடிங் நிறுவனமான விஷால் எக்ஸ்போர்ட்ஸ் ஓவர்சீஸ் 98.39 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடு பட்டுள்ளது.

கூட்டமைப்பு கடன்

பிற வங்கிகளின் கூட்டமைப்பு கடன் கீழ் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டவர்கள்

1. குடோஸ் கெமி - ரூ. 1,301.82 கோடி
2. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் - ரூ. 597.44 கோடி
3. ஜாஸ் இன்ப்ராஸ்டரக்ச்சர் & பவர் லிமிட்டட் - ரூ. 410.96 கோடி
4. விஎம்சி சிஸ்டம்ஸ் லிமிட்டட் - ரூ. 296.08 கோடி
5. எம்பிஎஸ் ஜூவ்வல்லர்ஸ் - 266.17 கோடி ரூபாய்
6. அரவிந்த் ரெமடிஸ் - ரூ. 158.16 கோடி
7. ஐசிஎஸ்ஏ லிமிட்டட் - ரூ. 134.76 கோடி

 

Have a great day!
Read more...

English Summary

Punjab National Bank big wilful defaulters list; check 18 names here