ஜிஎம்ஆர் அனல்மின் நிலையத்தைக் கையகப்படுத்தும் அதானி!

இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானியின் எரிசக்தி பிரிவு, ஜிஎம்ஆர் இன்ப்ராஸ்ட்ரெக்சர் லிமிடேட் நிறுவனத்திற்குச் சொந்தமான 1,370 மெகாவாட் திறனுள்ள அனல் மின்நிலையத்தைக் கையகப்படுத்தும் முயற்சிகளைச் செய்துவருவதாக விவரமறிந்தவர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஜிஎம்ஆர் சத்தீஸ்கர் எனர்ஜி லிமிடேட் நிறுவனத்தின் 58 பில்லியன் ரூபாய் மொத்தக்கடனில், அதானி பவர் லிமிடேட் நிறுவனம் 38 மில்லியன் ரூபாய் கடனுக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதாகக் கூறிய நபர், இந்தத் தகவல் மிகவும் இரகசியம் என்பதால் பெயர் வெளியிட மறுத்துவிட்டார். மேலும் 14பில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிதி அளிக்காதவற்றையும் அதானி பவர் நிறுவனம் எடுத்துக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

மத்திய வங்கி

ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களைத் திவாலாகும் நிலைமைக்குத் தள்ளிய வலியுறுத்தல் கடன்களை(Stressed Loans) மறுகட்டமைப்பு செய்யும் பணிகளில் இந்திய மத்திய வங்கி இறங்கியுள்ளது.

அறிவிப்பு

கடன் வழங்கிய நிறுவனங்கள் முறையான அனுமதி அளித்த பிறகு, சில வாரங்கள் கழித்து இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஜிஎம்ஆர்

30 பில்லியன் ரூபாய் கடனை 52% பங்குகளாக மாற்றும் மறுகட்டமைப்புத் திட்டத்தைக் கடந்த வருடம் ஏற்றுக்கொண்ட பிறகு, கடன் வழங்கிய நிறுவனங்கள் ஜிஎம்ஆர் சத்தீஸ்கர் நிறுவனத்திலிருந்து ஜிஎம்ஆர் இன்ப்ரா நிறுவனத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன.

அனல் மின் நிலையம்

ஜிஎம்ஆர் சத்தீஸ்கர் நிறுவனத்தில் 685 மெகாவாட் திறனுள்ள 2 நிலக்கரி அனல் மின்நிலையங்கள் 2015 மற்றும் 2016ம் ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வந்ததாக , அந்நிறுவன இணையதளம் தெரிவிக்கிறது. அதானி பவர் மற்றும் ஜி.எம்.ஆர் இன்ப்ரா நிறுவனங்களின் செய்திதொடர்பாளர்கள் இதுபற்றிக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

போட்டி

அதானி பவர், வேதாந்தா லிமிடேட், ஜேஎஸ்டபில்யூ, என்எல்சி இந்தியா லிமிடேட் போன்ற நிறுவனங்கள் இத்திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளிகளைச் சமர்ப்பித்ததாக, லென்டர் பவர் பைனான்ஸ் கார்ப் நிறுவனம் மே31 வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தது.

Have a great day!
Read more...

English Summary

ஜிஎம்ஆர் அனல்மின் நிலையத்தைக் கையகப்படுத்தும் அதானி!