கேரளா, கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காபி உற்பத்தி 20 வருட சரிவை சந்தித்துள்ளது!

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அடுத்தப் பருவத்துக்கான காபி உற்பத்தியில் இந்தியா கடுமையான சரிவைச் சந்திக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

ஆசியாவிலேயே காபி உற்பத்தியில் 3 வது இடத்தில் உள்ள தென்னிந்தியா இயற்கை பேரிடர்களால் சேதமடைந்துள்ளன. கேளரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் விரைவில் புனரமைக்க முடியாத அளவுக்குக் காபித்தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

உற்பத்தி குறைவு

அக்டோபர் மாத தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட 316,000 மெட்ரிக் டன்னை விட 25 சதவீதம் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளதாக, யுனைடெட் பிளாண்டர்ஸ் சங்கத்தின் தலைவர் நாகப்பன் தெரிவித்தார். இது 1997-98 ஆண்டின் காபி உற்பத்தியை விடக் குலறவானது என அரசின் தரவுகளும் சுட்டிக்காட்டுகின்றன.

விலைகளில் சரிவு

உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அராபிகா வகைக் காபி ரகங்களின் விலை இந்த ஆண்டு 19 சதவீதம் குறைந்தது. ரோபஸ்டா வகைக் காபியின் விலை 10 சதவிகிதம் சரிவைச் சந்தித்தன.

இருண்ட எதிர்காலம்

வெள்ளத்தில் எதிர்காலத்தையே இழந்து விட்டதாகக் கூறும் நாகப்பன், காபி பயிர் மட்டும் அல்லாமல் தாவரங்களும் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். காபி தோட்டங்கள் இதிலிருந்து மீள்வதற்கு 3 அல்லது 4 ஆண்டுகள் பிடிக்கும் என்றார்.

கடுமையான வெள்ளம்

394 பேரின் உயிரைக் குடித்த இந்த வெள்ளத்தில் 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். ஜூன் 1ஆம் தேதி வரை சராசரியை விட 40 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் 19 வரை சராசரியை விட 164 சதவிகிதம் மழை கொட்டியுள்ளது.

பருவமழை தீவிரம்

கர்நாடகா, உள்துறை மஹாராஷ்ட்ரா, தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமான பருவமழையால் வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை நடுவம் கூறியுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

India's Coffee Output Seen Plunging to Two-Decade Low on Floods