கேரளா மக்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை அடுத்து அங்குள்ள வரி செலுத்துனர்களுக்கு மட்டும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய நேரடி வரி வாரியம் இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில் கேரளா வாழ் மக்களுக்கு ஆகஸ்ட் 31-ம் தேதியாக இருந்து வந்த வருமான வரி தாக்கல் தேதி 2018 செப்டம்பர் 15-ம் தேதி வரை நீடிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் இதே போன்று 2018 ஜூலை 31-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31-ம் தேதியாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி துறையின் இந்த அறிவிப்பினால் காலதாமதாக வரி செலுத்தும் போது இருந்து வந்த 5000 ரூபாய் வரையிலான அபராதத்தினைப் பலராலும் தவிர்க முடிந்தது.

Have a great day!
Read more...

English Summary

ITR filing deadline extended for Kerala due to floods