விவசாயிகளுக்குப் பயிற் காப்பீடு அளிக்காததால் எஸ்பிஐ வங்கி கிளையை மூடிய அமைச்சர்!

சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் ஜெயேஷ் ராதாதியா திங்கட்கிழமை ராஜோட் ஜேட்பூர் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் பயிற் காப்பீட்டினை நீண்ட காலமாக விவசாயிகளுக்கு அளிக்காததால் இழுத்து மூடியுள்ளார்.

பாஜக எம்எல்ஏ மற்றும் அமைச்சரான ஜெயேஷ் ராதாதியா இவருடன் சில விவசாயிகளை அழைத்துச் சென்று பயிர் காப்பீட்டுப் பணத்தினை அளிக்குமாறு கேட்டுள்ளார். கோரிக்கை செயல்பாட்டில் உள்ளது என்று வங்கி அதிகாரிகள் கூறிய பதிலில் ஆத்திரம் அடைந்த இவர் வங்கி கிளையை இழுத்து மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் என்ன செய்வதென்று அரியாத ஊழியர்கள் வங்கி கிளையினை மூடிவிட்டுச் சென்றுள்ளது அந்தப் பகுதியில் பெறும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயேஷ் ராதாதியா

ஜெயேஷ் ராதாதியாவும் ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கி ஒன்றை நடத்தி வருகிறார். 150 விவசாயிகள் பயிர் காப்பீட்டிற்கான பிரீமியம் தகையினைச் செலுத்தி இருந்த போதிலும் 2016-2017 நிதி ஆண்டுக்கான பயிற் காப்பீட்டுத் தொகையினைத் திருப்பி அளிக்காததால் கோபம் அடைந்து வங்கி கிளையினை இழுத்து மூடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் பொறுப்பு?

பயிர் காப்பீட்டுத் தொகையினை வழங்குவதற்கு வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனம் தான் பொறுப்பு. இவர்கள் 10 மாதமாக விவசாயிகளுக்குக் காப்பீட்டுப் பணத்தினைத் திருப்பி அளிக்காததால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது எனது கடமை என ஜெயேஷ் ராதாதியா தெரிவித்துள்ளார்.

காப்பீடு தொகை

ஜேத்பூர் எஸ்பிஐ வங்கி கிளையில் 150 விவசாயிகளுக்கு 1.75 கோடி வரை காப்பீடு பணம் வழங்கப்பட வேண்டும். அது நீண்ட காலமாகத் தாமதமாகவே இருந்து வந்துள்ளது. அதே நேரம் அருகில் உள்ள கானாக்யா எஸ்பிஐ வங்கி கிளையில் பயிர் காப்பீடு பெற்றவர்களின் பணம் எல்லாம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கூட்டம்

எஸ்பிஐ வங்கி அதிகாரிகளுடன் 3 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தான் இது பற்றி விவாதித்த போது விரைவாகப் பயிர் காப்பீட்டினை வழங்குமாறு கோரிக்கை வைத்ததாகவும் ஆனால் அப்போது முதலே கோரிக்கைகள் செயல்பாட்டில் உள்ளது என்று காலம் தாழ்த்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வங்கி மேலாளர்

இது குறித்து அந்த எஸ்பிஐ வங்கி கிளையின் மேலாளரைத் தொடர்பு கொண்ட போது அமைச்சர் மீது எந்தப் புகாரும் காவல் நிலையத்தில் அளிக்கவில்லை என்றும் தான் விடுமுறையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Have a great day!
Read more...

English Summary

Minister Jayesh Radadiya On Monday Ordered Officers Of State Bank Of India To Shut A Bank