வெறும் 8 மாதத்தில் 40% வளர்ச்சி.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி..!

நாட்டின் முன்னணி வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2018ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 40 சதவீதம் வரையில் உயர்ந்து இன்று ஒரு பங்கின் விலை 1300 ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜியோ

இந்நிறுவனத்தின் பங்கு உயர்வுக்கு முக்கியக் காரணமாக ஜியோ உள்ளது. இந்திய டெலிகாம் சந்தையில் வோடபோன் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில் ஜியோ முன்னேறியுள்ளது.

வருவாய்

இதன் மூலம் ஜியோவின் மொத்த சந்தை மதிப்பு 22.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் வோடபோன் 19.3 சதவீதமும், ஐடியா செல்லுலார் 15.4 சதவீதம், ஏர்டெல் 31.7 சதவீதமாக உள்ளது.

பங்கு சந்தை மதிப்பு

இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் 8 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

லாபம்

2018-19ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த லாபம் 9,485 கோடி ரூபாயாக உள்ளது, வருடாந்திர அடிப்படையில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 4.5 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

RIL hits Rs 1,300 apiece; stock up over 40% this year