விரைவில் கூகுள் உங்கள் கேள்விக்கான பதில் மட்டும் இல்லாமல் கடனும் அளிக்கும்!

உலகின் மிகப் பெரிய தேடு பொரி நிறுவனமான கூகுள் இந்தியாவின் 4 முக்கிய வங்கி நிறுவனங்களுடன் இணைந்து 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான டிஜிட்டல் நிதி சேவை வழங்கும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

இதற்காகக் கூகுள் நிறுவனம் எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடாக் மஹிந்தரா வங்கி மற்றும் ஃபெடரல் வங்கிகளுடன் ஒப்பந்தம் ஓட்டுள்ளது. மேலும் இந்தக் கடன் தொகையானது கூகுள் பே கீழ் வழங்கப்படும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

டெக் ஜாம்பவான்கள்

பேஸ்புக்கின் வாட்ஸ்ஆப் முதல் ஜாக்மா வரை அனைத்து இணையதள வணிக ஜாம்பாவன்களும் உலகின் வேகமான மொபைல் தரவு பயன்பாட்டுடன் இணைந்து நிதி சேவை திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டுகளை அடுத்துச் சிறு கடன் பெற டிஜிட்டல் மொபைல் உலகில் செயலிகள் முக்கியப் பங்குகள் வகிக்க உள்ளன.

தேஜ்

கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே தேஜ் செயலியினை அறிமுகம் செய்து பேமென்ட் சேவையினை வழங்கி வரும் நிலையில் அடுத்தக் கட்டமாக வங்கி கணக்கில் கடன் அளிக்கும் சேவையினை அறிமுகம் செய்ய உள்ளது.

இலக்கு

கூகுள் பேமெண்ட்ஸ் சேவையினை இந்தியாவில் 55 மில்லியன் நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆண்டுக்கு 30 பில்லியன் டாலர் மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. 2023-ம் ஆண்டுக்குள் அதனை 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Have a great day!
Read more...

English Summary

Soon Google To Launch Digital Loan Plans In India