ரிலையன்ஸ் ஜியோ உடனான விலை போரில் சிக்கி சின்னாபின்னமான வோடாபோன் - ஐடியா!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016 செப்டம்பர் முதல் வணிக ரீதியான டெலிகாம் சேவையினை அளித்து வரும் நிலையில் இலவசங்கள் மற்றும் விலை போர் காரணத்தினால் போட்டி நிறுவனங்களின் சந்தை பெரும் அளவில் சரிந்துள்ளது.

இதனை அடுத்து வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைய முடிவு செய்துள்ள போதிலும் அது மிகப் பெரிய இழப்பாகவே உள்ளது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

வோடாபோன் - ஐடியா

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சேவைக்கு வந்த பிறகு வோடாபோன் - ஐடியா நிறுவனங்களின் 7 சதவீத சந்தை வருவாய் சரிந்துள்ளது.

ஏர்டெல்

இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக வளர்ந்துள்ள ஏர்டெல்லின் சந்தை வருவாய் இரண்டு சதவீதம் வரை சரிந்துள்ளதாம்.

பிற நிறுவனங்கள்

அது மட்டும் இல்லாமல் சிறிய டெலிகாம் நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஏர்செல், ரிலையன்ஸ் கம்யுனிகேஷன்ஸ், டெலினார் இந்தியா மற்றும் டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் 14 சதவீத சந்தை வருவாயினை ஜியோ கைப்பற்றியுள்ளது.

இந்த வருவாய் சந்தையானது மொத்த வருவாய், இண்டர்கண்ட் கட்டணங்கள் மற்றும் பிற பிடிப்புகள் போன்றவை மூலமாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனங்கள்

பொதுத் துறை டெலிகாம நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சந்தை வருவாய் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஜியோ நிறுவனத்தினை விடக் குறைந்த விலையில் பல சலுகைகளை வாரி வழங்கியதே ஆகும்.

கானாமல் போன நிறுவனங்கள்

டெலினார் கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பார்தி ஏர்டெல் உடன் இணைந்த நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மூடப்பட்டு அதன் நெட்வொர்க் சேவைகளை ஜியோ கைப்பற்றியுள்ளது. ஏர்செல் நிறுவனம் திவால் ஆகியுள்ளது.

வருவாய் உயர்வு

சென்ற மூன்று காலாண்டில் டெலிகாம் துறையின் மொத்த வருவாயானது ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அதிகரித்துள்ளது. அதிலும் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோவின் வருவாய் 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.

Have a great day!
Read more...

English Summary

Vodafone & Idea Affected Worstly In Relaiace Jio's Tariff War