ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை விமான பயணிகள் தலையில் சுமத்த முடிவு!

அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, விமானக் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.எரிபொருள் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இந்த நடவடிக்கையைத் தவிர்க்க முடியவில்லை என, ஸ்பைஸ் ஜெட் தலைவர் அஜய்சிங் தெரிவித்துள்ளார்.

தேவைகள் பலவீனமாக இருப்பதால் வருவாயை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வருவாய் வறட்சி

எரிபொருள் விலையேற்றம், ரூபாய் மதிப்பு படுத்துக் கொண்டபோது கூடக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பயண வறட்சியான காலகட்டம் என்பதால், அதற்குப் பிந்தைய மாதங்களில் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

கட்டணம் உயர்வு

தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கப்படும்.

செலவைக் குறைக்கத் திட்டம்

விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் அதிகப்படியான செலவினங்களைக் குறைத்து, வருவாயைப் பெருக்குவதில் கவனம் செலுத்தப்படும்.

போயிங் விமானம் அறிமுகம்

அடுத்த மாதம் முதல் போயிங் 737 மேக்ஸ் விமானப் போக்குவரத்தை ஸ்பைஸ்ஜெட் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரிவித்த அஜய்சிங், இது 15% அதிக எரிபொருள் திறன் கொண்டதாகவும், பராமரிப்புச் செலவு குறைவாக இருக்கும் என்றும் கூறினார்.

Have a great day!
Read more...

English Summary

Airfares set to rise this festive season, says SpiceJet’s Singh