ஒரு வழியாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை எண்ணி முடித்த ஆர்பிஐ!

பிரதமர் மோடி அவர்கள் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்புகளை நீக்கிய பிறகு புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றி 2017 ஜூலை மாதம் வரை அளிக்கப்பட்டது.

பின்னர் எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெற பெறப்பட்டது என்ற துல்லியமான விவரங்களைப் பெற ஆர்பிஐ அவற்றை எண்ணி வந்த நிலையில் இன்று 99.30 சதவீத நொட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

திரும்பப் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு

பழைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் பணிகளானது 2017 ஜூலை மாதத்துடன் நிறுத்தப்பட்டு அவற்றை எண்ணி வந்த ஆர்பிஐ 15,310.73 பில்லியன் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

எவ்வளவு நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன?

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பினை நீக்கிய போது 15,417.93 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வந்தன. அவற்றில் 15,310.73 பில்லியன் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன.

அதிகரித்த பணப் புழக்கம்

சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 2018 மார்ச் மாதம் ரூபாய் நோட்டுகள் புழக்கமானது 37.7 சதவீதம் அதிகரித்து 18,037 பில்லியன் ரூபாயாக உள்ளது.

ரூபாய் நோட்டுகள்

ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2.1 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 2018 மார்ச் வரையிலான கணக்கின் படி 80.2 சதவீத ரூபாய் நோட்டுகள் 2,000 மற்றும் 500 ரூபாயாகப் புழக்கத்தில் உள்ளன.

Have a great day!
Read more...

English Summary

RBI Say's 99.30% Of Demonetised Money Returnd Succesfully