ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ள போது கவனிக்க வேண்டியவை!

டாலருக்குக் எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 42 பைசா சரிந்து 70.52 ரூபாய்களாக உள்ளது. சர்வதேச நாணய சந்தையில் அமெரிக்க டாலர் வலுவான நிலையினை நோக்கி உயர்ந்துகொண்டு வருகிறது.

ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதியாளர்களுக்குப் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே ரூபாய் மதிப்புச் சரிவில் முக்கியமாக நாம் எதை எல்லாம் கவனிக்க வேண்டும் என்று இங்குப் பரக்கலாம்.

அந்நிய செலாவணி

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி செலாவணி மாற்றுச் சந்தையில் ரூபாய் மதிப்பு சரிந்து 70.10 டாலராக வர்த்தகம் துவங்கிய நிலையில் அது மேலும் சரிந்து 70.52 ரூபாயாக உள்ளது.

டாலர்

அமெரிக்க டாலரானது ஒரே இரவில் ஆசிய நாணயங்களை விடக் கூடுதலாக 4 வாரம் இல்லா உயர்வினை பெற்றுள்ளது. அமெரிக்கா - மெக்சிகோ இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களில் சுமுக முடிவு காணப்பட்டாலும் சீனா இடையிலான வர்த்தகத்தில் இழுபறி நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஈரான்


ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து இருந்த நிலையில் பிற கச்சா எண்ணெய் வலம் வைத்துள்ள நாடுகள் உற்பத்தியினை அதிகரித்துள்ளதால் நிலைமை சீராக உள்ளது. ஆனால் நவம்பர் மாதத்திற்குப் பிறகு தான் இதன் தாக்கல் தெரியும் என்று கூறுகின்றனர்.

பங்கு சந்தை

அமெரிக்கப் பங்கு சந்தை குறியீடுகளான S&P மற்றும் மும்பை பங்கு சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ், தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி உள்ளிட்டவை புதிய உச்சங்களைத் தொட்டுச் சாதனைப் படைத்து வருகின்றன.

Have a great day!
Read more...

English Summary

Rupee Collapses To Lifetime Low: Things To Know