புதிய உச்சத்தைத் தொட்ட டீசல் விலை - அத்தியாவசியப் பொருள் விலை உயருமா!

அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து பெட்ரோல் விலை 78 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையில் 14 பைசாவும், டீசல் விலையில் 15 பைசாவும் உயர்த்தியுள்ளன.

பெட்ரோல் டீசல் விலை

ஜூன் 3 ம் தேதிக்குப் பிறகு முதல் முறையாகப் பெட்ரோல் விலையை 78 ரூபாயாகக் கடந்துள்ளது. தற்போது டெல்லியில் ரூ. 78.05 க்கும், மும்பையில் ரூ. 85.47 க்கும் விற்பனையாகிறது.டீசல் விலை லிட்டருக்கு 69 ரூபாய் 61 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளன. மும்பையில் 73ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் மலிவு

விற்பனை வரி மற்றும் மதிப்புக்கூட்டு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், மற்ற மாநிலங்களை விட டெல்லியில் குறைவான விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்ட வருகிறது. கடந்த 13 நாட்களில் டெல்லியில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 91 காசுகளும், டீசல் விலையில் லிட்டருக்கு 89 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

புதிய உச்சம்

டீசல் விலை முந்தைய மாதங்களை விட அதிகரித்துள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை 78.43 ரூபாயும், மும்பையில் 86.24 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Today Petrol Diesel Rates Touch New High