உஷார்.. வங்கிகள் செப்டம்பர் 1 முதல் 5 நாட்களுக்கு விடுமுறை..!

உங்களுக்கு முக்கியமான வங்கி பரிவர்த்தனைகள் செய்ய வேண்டி இருந்தால் இந்த வாரமே செய்துவிடுங்கள். செப்டம்பர் 1 முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறையாக இருக்கலாம்.

வங்கி வட்டாரங்களில் இருந்து பெரும்பாலான வங்கிகள் மதத்தின் முதல் சனிக்கிழமை செயல்பட்டு வந்தாலும் வரும் வாரம் விடுமுறையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. வங்கிகளுக்குப் பொதுவாக மாதத்தின் 2 மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் விடுமுறைஇ என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கி விடுமுறை நாட்கள்

செப்டம்பர் 1 -க்கு பிறகு செப்டம்பர் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 3 திங்கட்கிழமை ஜன்மாஷ்டமி, மற்றும் செப்டம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் ஆர்பிஐ ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்பதால் பங்கு பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

ஆர்பிஐ வேலை நிறுத்தம்

ஆர்பிஐ ஊழியர்கள் நீண்ட காலமாகவே இந்த வேலை நிறுத்தம் குறித்து நீண்ட காலமாகவே பேசி வரும் நிலையில் இந்த இரண்டு தேதிகளில் கண்டிப்பாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளனர்.

எஸ்பிஐ - ஐஎப்எஸ்சி குறியீடு

மறுபக்கம் எஸ்பிஐ வங்கியானது நாடு முழுவதும் 1,300 கிளைகளின் ஐஎப்எஸ்சி குறியீடு போன்றவற்றையும் மாற்றி அறிவித்துள்ளது. இந்த மாற்றத்திற்கு 5 துணை வங்கிகள் மற்றும் பாரதிய மஹிலா வங்கிகளுடன் இணைந்தே காரணம் ஆகும்.

டெபிட் கார்டு

அது மட்டும் இல்லாமல் எஸ்பிஐ வங்கி சிப் இல்லாத டெபிட் கார்டுகள் டிசம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்றும் முடிந்த வரை வேகமாக உங்கள் வங்கி கிளையினை அணுகி அதனை இலவசமாக மாற்றிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Be Aware Banks To Close For 5 Days From September 1