வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. தவறினால் என்ன ஆகும்?

2017- 18 ஆம் ஆண்டுக்கான வருமான வரித் தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. கேரளா தவிர அனைத்து மாநிலங்களுக்கும் நாளை கடைசி நாள் ஆகும். இதனைச் செய்யத் தவறினால் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களின்படி அபராத தொகைளை செலுத்த நேரிடும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வருமானவரியைக் குறைப்பதற்காக வரி ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு உச்சவரம்புக்குக் கீழ் இருந்தாலும் வருமானவரி கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.

புதிய சட்டப்பிரிவு

2017-18 ஆம் நிதி ஆண்டில் தாமதமாக வருமான வரி செலுத்துவோருக்குத் தண்டத்தொகை விதிக்கப்படவில்லை. அதேநேரம் வருமான வரிச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 234F என்ற புதிய பிரிவால் 2018- 19 நிதி ஆண்டுகளில் தண்டத்தொகை வசூலிக்கப்படும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் 10,000 வரை அபராதம் செலுத்த நேரிடும்.

அபராத தொகை

2017-18 நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை காலதாமதமாகத் தாக்கல் செய்தால், 2017 நிதி சட்டத்திருத்தத்தின் படி 5000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 2019 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு தாமதமாக வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்தால் தண்டத்தொகை 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த வருமானம் 5,00,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் தண்டத்தொகை ஆயிரத்தை மிகாது

வாய்ப்புகள்

வருமான வரி தாக்கல் செய்த பிறகு, சில வருமானங்களைப் பதிவு செய்யவில்லை என்று உணர்ந்தாலோ, திரும்பப் பெறுதலில் விலக்குகள் கிடைக்கவில்லை என்றாலோ திருத்தப்பட்ட வருமான வரியைத் தாக்கல் செய்து கொள்ளலாம்.

கால அவகாசம்

விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரியை, சரிபார்த்த பின்ன 120 நாட்களுக்குள் தாக்கல் செய்ய அனுமதி உண்டு. வருமானத்தில் முக்கியமான இழப்புகள் ஏற்பட்டிருந்தால் வருமானவரி தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்படும்.

Have a great day!
Read more...

English Summary

Income Tax Returns Filing Last Date Is Tomorrow. What Will Happen If Not Filing?