டெலிகாம், பெட்ரோல், ஆயுதம் உற்பத்தி என இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் அம்பானி பிரதர்ஸ்

மும்பை மின் விநியோக வர்த்தகத்தை 18,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ததன் மூலம், தனது கடனை 7,500 கோடி ரூபாயாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் குறைத்துள்ளது.

இந்த ஒப்பந்த நடைமுறைக்கு முன்னர் மொத்தக் கடன் தொகை 22,000 கோடி ரூபாயாக இருந்தது.மூன்றாவது முறையாக நிலுவையில் இருந்த கடன்தொகையைக் குறைக்கப்பட்டு விட்டது.

நம்பிக்கை

எதிர்வரும் ஆண்டில் கடனிலிருந்து விடுபடும் எனத் தெரிவித்த ரிலையன்ஸ் கதலைவர் அனில் அம்பானி, ஒழுங்குமுறை சொத்துக்கள் மூலம் 5,000 கோடி ரூபாய் ரொக்க இருப்புக்களைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.
இந்த ஒப்பந்தங்களுக்குப் பிறகு நிறுவனத்தின் கடன் பங்கு விகிதம் 0.3 ஆக உள்ளது. 2018 நிதி ஆண்டின் இறுதியில் நிறுவனத்தின் மொத்த கடன் பங்கு விகிதம் 0.87 ஆக இருந்ததாக ப்ளூம்பெர்க் தரவில் கூறப்பட்டுள்ளது.

செலவுக்கு முடிவு

வருடாந்திர வட்டிச் செலவை 2,600 கோடி ரூபாயிலிருந்து 800 கோடியாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அம்பானி கூறினார். ஜூன் 30, முடிவடைந்த இரண்டவாது காலாண்டில், நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ .272 கோடியாக
இருந்தது. மொத்த வருமானம் ரூ .7,991 கோடியாக உயர்ந்துள்ளது.

மாஸ்டர் பிளான்

அம்பானியின் மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் முதல் காலாண்டில் 68 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இருப்பினும் 2 அல்லது 3 ஆண்டுகளில் லாபம் ஈட்ட முடியும் என அவர் நம்புகிறார். இதனைத் தற்போத 4.6 லட்சம் பயணிகள் பயன்படுத்துவதாகக் கூறிய அவர், 2031 ஆம் ஆண்டில் 8.8 இலட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இலக்கு இதுதான்

சொத்துக்களை விற்பனை செய்வதைப் பொருட்டாகக் கருதாத அனில் அம்பானி, பொறியியல், கட்டுமானம், உள்கட்டமைப்புத் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்ய முடிவு செய்துள்ளார். குறிப்பாகப் பாதுகாப்புத் துறை மீது கவனம் செலுத்த திட்டமிட்டுள்ள அம்பானி, உலகளாவிய கூட்டு முயற்சிகளுடன் விமான நிறுவனம், கடற்படை தளம் கட்டுமானங்களை அமைக்க இருப்பதாகக் குட் ரிட்டன் தளத்திடம் அம்பானி கூறினார். ஏற்கனவே பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் அவியேசனுடன் ரபேல் ஃபைட்டர் ஜெட் விமானங்களை அம்பானி தயாரித்து வருகிறார்.

Have a great day!
Read more...

English Summary

Mumbai Power Business: Adani deal slashes Reliance Infra’s debt load