2017-2018 நிதி ஆண்டில் பொதுத் துறை வங்கிகளின் வாரா கடன் 64,106 கோடி ரூபாய் குறைப்பு.. எப்படி?

பொதுத் துறை வங்கிகள் வாரா கடன்களில் சிக்கி தவித்து வரும் நிலையில் ஆர்டிஐ கேள்விக்கு ஆர்பிஐ வாரா கடன் அளவு 2017-2018 நிதி ஆண்டில் 64,106 கோடி ரூபாய்க் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

2017-2018 நிதி ஆண்டு இறுதியில் பொதுத் துறை வங்கி நிறுவனங்களின் வாரா கடன் அளவானது 8,95,601 கோடி ரூபாயாக இருந்ததாகத் தெரிவித்து இருந்த நிலையில் இந்தப் பதில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஆர்பிஐ

ஆர்பிஐ அளித்த பதிலில் 2016-ம் ஆண்டு வங்கிகள் எடுத்த நடவைக்கையினால் 40,903 கோடி ரூபாய் மதிப்பிலான வாரா கடன் குறைந்ததாகவும், இதுவே 2017-2018 நிதி ஆண்டில் 53,250 கோடி ரூபாய் வாரா கடன் குறைக்கப்பட்டதாகவும் தரவுகள் கூறுகின்றன.

வாரா கடன்

2016-2017 நிதி ஆண்டில் வாரா கடன் 5,39,968 கொடி ரூபாயாக இருந்தது என்றும், 2015-2016 நிதி ஆண்டில் 6,84,732 கோடி ரூபாயாக இருந்ததாகவும் தரவுகள் கூறுகின்றன.

பொதுத் துறை வங்கி நிறுவனங்கள்

இந்தியாவில் 21 பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் உள்ளன. ஆனால் மத்திய வங்கியானது வங்கிகள் வாரியான வாரா கடன் அளவின் விவரங்களை ஆர்டிஐ பதிலில் அளிக்கவில்லை.

மத்திய அரசு - ஆர்பிஐ

அதே நேரம் மத்திய அரசும் 21 பொதுத் துறை வங்கி நிறுவனங்களைக் குறைத்து மூலதனத்தினைக் குறைபாட்டினை ஈடு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற என்பது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

PSU Bank Bad Loans Reduced By Rs. 64,106 Crore Through Recoveries In 18FY