மூன்றாம் தர நகரங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜியோ.. 4 ஜி சேவையில் புதிய உச்சம்!

மலிவுவிலை ஜியோபோன், 4ஜி போன் ஆகியவற்றை வழங்கி போட்டியாளர்களுக்குப் பீதியை ஏற்படுத்தியுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, 4ஜி சேவை மூலம் சி-வகை நகரங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

4 ஜி சேவையில் குறிப்பிடத்தக்க சேவையை வழங்கி மூன்றாம்தர வட்டாரங்களை விட்டு, போட்டியாளர்கள் பின்னுக்குத் தள்ளியுள்ளதாக மொத்த வருவாய் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஜியோ ஆதிக்கம்

இமாச்சலப் பிரதேசம், பீகார், ஒடிசா, அசாம், வடகிழக்கு மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட சி வகை நகரங்களில் ஜியோ ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொழில்துறை சரிக்கட்டப்பட்ட மொத்த வருவாய் 17.2 விழுக்காடு உயர்ந்துள்ளது.

பின்னடைவு

மாநகரப்பகுதிகளில் ஜியோவின் சரிக்கட்டப்பட்ட மொத்த வருவாய் 0.9% வரை சரிந்தது, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இங்கு 4G சேவைகளை வலுவான நிலையில் வழங்குகின்றன. மூன்றாம் தர வட்டாரங்களில் போட்டியாளர்களைப் பீதியடைய வைத்துள்ள ஜியோ, மாநகரப் பகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கேள்வி

ஏர்டெல்லின் 4ஜி ஊடுருவல் குறைவாக இருப்பதால், மூன்றாம்தர வட்டாரங்களில் ஜியோ தனித்துவம் பெற்றுள்ளதாக ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. பி மற்றும் சி வட்டாரங்களில் செயல்பாட்டைத் தக்க வைக்குமா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளது.

வளர்ச்சி- வீழ்ச்சி

ஜியோவின் சலுகை விலைகள் தொலைத்தொடர்புத்துறையில் பொதுவாகப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில் துறை காலாண்டில் 1.3 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் ஆண்டு வருவாயில் 9.4 சதவீதம் வீழ்ச்சியடைந்து 32,200 கோடியாக இருக்கிறது. ஜியோவின் சரிக்கட்டப்பட்ட ஆண்டு வருவாய் 7,200 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஏர்டெல் 10,192 கோடியாக அதிகரித்துள்ளது. வோடபோன் 7.1 சதவீதமும் ஐடியா 5.2% விழுக்காடும் வீழ்ச்சியடைந்துள்ளன.

காலாண்டுகளில் ஜியோ 14% q-o-q வளர்ச்சியடைந்துள்ளது எனக் கோடக் நிறுவன அறிக்கையில் குறிப்பிட்டது.

 

Have a great day!
Read more...

English Summary

Reliance Jio dominates in third class cities, peak in 4G service!