வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை எல்லா மாநிலங்களிலும் இல்லை.. விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்..!

வங்கிகளுக்கு செப்டம்பர் 1 முதல் 5 நாட்கள் விடுமுறை என்று செய்திகள் வெளியான நிலையில் நிதி அமைச்சகமானது வெள்ளிக்கிழமை அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisement

நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் வங்கிகளுக்குச் செப்டம்பர் 1 முதல் 5 நாட்களுக்கு விடுமுறை என்று பரவி செய்தியில் உன்மை இல்லை என்று செப்டம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை மற்றும் செப்டம்பர் 8 இரண்டாவது சனிக்கிழமை மட்டுமே விடுமுறை என்றும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

மேலும் திங்கட்கிழமை செப்டம்பர் 3ம் தேதி சில மாநிலங்களில் மட்டும் ஜென்மாஷ்டமிக்காக விடுமுறை இருக்கும் என்றும் பிற மாநிலங்களில் எப்போது போல வங்கி சேவைகள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆர்பிஐ வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யும் நிலையிலும் வங்கிகள் இயங்கும் என்றும் அதனால் சில பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டாலும் வங்கிகளுக்கு விடுமுறை இருக்காது என்றும் ஏடிஎம் மையங்கள் தடையின்றிச் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

English Summary

Banks Close for Continue 5 days? Finance Ministry clears the Rumour
Advertisement