ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்கும் சந்தா கோச்சர்!

ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் பங்கு தார்கள் சந்தா கோச்சரினை மீண்டும் ஐசிஐசிஐ வங்கியின் தலைவராகப் பணியில் அமர்த்த 100 சதவீத ஆதரவினையும் அளித்துள்ளனர்.

விடியோகான் நிறுவனத்திற்காகவும் தனது கணவருக்காகவும் கடன் அளித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று சந்தா கோச்சர் மீது புகார் எழுந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வங்கியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஆண்டுப் பொதுக் கூட்டம்

இந்நிலையில் ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸின் 23வது ஆண்டுப் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் தில் அவரை மீண்டும் துணை நிறுவனமான ஐசிஐசிஐ வங்கியின் தலைவராகப் பணியமர்த்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனன் சந்தா கோச்சரினை பணியில் அமர்த்துவது குறித்து வாக்கெடுப்பு நடத்திய நிலையில் அதில் 97.7 சதவீதத்தினர் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். மேலும் இந்தக் கூட்டத்தில் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்று அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்

சந்தா கோச்சரினை மீண்டும் தலைவராகப் பணியமர்த்த முடிவு செய்யப்பட்ட நிலையில் ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனப் பங்குகள் 6.30 சதவீதம் என 1.93 சதவீதம் உயர்ந்து 333.50 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.

ஐசிஐசிஐ வங்கி

அதே நேரம் ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் சந்தை நேர முடிவில் 1.75 புள்ளிகள் என 0.51 சதவீதம் சரிந்து 342.65 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

Have a great day!
Read more...

English Summary

Chanda Kochhar gets majority votes to be reappointed on board of ICICI Securities