மோடி ஆட்சியில் முதன் முறையாக இந்தியாவின் காலாண்டு ஜிடிபி 8.2%-ஐ தொட்டது!

2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு முதல் காலாண்டில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணத்தினால் ஜிடிபி 5.6 சதவீதமாகச் சரிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொழில் துறை

தொழில் துறை வளர்ச்சி சென்ற ஆண்டு முதல் காலாண்டில் 0.1% சதவீதமாக இருந்த நிலையில் 10.3 சதவீதமாக வளர்ந்துள்ளது.

விவசாயத் துறை

சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டில் விவசாயத் துறையின் வளர்ச்சி 3 சதவீதமாக இருந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் 5.3 சதவீதமாக வளர்ந்துள்ளது.

சுரங்க துறை

சுரங்க துறையில் சென்ற ஆண்டு முதல் காலாண்டில் 1.7 சதவீதமாக இருந்த வளர்ச்சியானது நடப்பு நிதி ஆண்டில் 0.1 சதவீதமாகச் சரிந்ததுள்ளது.

உற்பத்தித் துறை

உற்பத்தித் துறையில் சென்ற ஆண்டு ஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்க நடவடிக்கை போன்ற காரணங்களால் முதல் காலாண்டில் 1.8 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதி ஆண்டில் 13.5 சதவீதமாக இருந்தது.

நிதி சேவைகள்

சென்ற ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் நிதி சேவைகள் துறையின் வளர்ச்சி 8.4 சதவீதமாக இருந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் 6.5 சதவீதமாக உள்ளது.

கட்டுமானம்

கட்டுமான துறையில் சென்ற ஆண்டு முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதமானது 1.8 சதவீதமாக இருந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் 8.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

India's Q1 GDP Grown To 8.2%