வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. நிலவரம் என்ன?

2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்ய 2018 ஆகஸ்ட் 31 கடைசித் தேதி என்ற நிலையில் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது எனத் தகவல்கள் கூறுகின்றன.

அருண் ஜேட்லி

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சென்ற இரண்டு ஆண்டுகளில் வருமான வரி தாக்கல்செய்பவர்களின் எண்ணிக்கை 75.51 லட்சம் மற்றும் 1.07 கோடிகளாக அதிகரித்துள்ளது எனவும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

வருமான வரி தாக்கல் எண்ணிக்கை

2013-2014 நிதி ஆண்டில் 6.38 லட்சம் கோடியாக ஐருந்து வருமான வரி வசூல் 2017-2018 நிதி ஆண்டில் 10.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது எனவும் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காரணம்

மார்ச் 2014-ம் ஆண்டு 3.8 கோடி நபர்கள் வருமான வரி தாக்கல் செய்து இருந்தனர் என்றும் அதுவே 2017-2018 நிதி ஆண்டில் 6.86 கோடி நபர்களாக அதிகரித்துள்ளது என்றும் இது பண மதிப்பு நீக்க நடவடிக்கை செய்ததன் விளைவு தான் எனவும் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி

2017 ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் முதல் ஆண்டில் மட்டும் பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 72.5 சதவீதம் வரை அதிகரித்தது என்றும் 66.17 லட்சமாக இருந்த எண்ணிக்கையானது 114.17 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Have a great day!
Read more...

English Summary

Last day of filing ITR: Income Tax Returns filing touches 5 crore mark