சில்லறை வர்த்தகத்தில் அமேசான், பிளிப்கார்ட்டை கழுத்தை பிடித்து வெளியேற்றுமா பேடிஎம் மால்!

இந்தியாவில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வாரி வழங்கி வாடிக்கையாளர்களிடையே ஆதிக்கம் செலுத்தி வரும் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்புகளைப் பறிக்க, பே.டி.எம் மால் நிறுவனம் பிக் பேஸ்கட்டுடன் கரம் கோர்த்துள்ளது.

இந்தியாவின் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் பேடிஎம் மூன்றாவது பெரிய நிறுவனமாக இருந்து வருகிறது. பிக் பஸார், பேஷன் ஷாப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் வருவாயைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

வணிக உறவு

தற்போது பிக்பேஸ்கட் நிறுவனத்துடன் இணைந்துள்ளதாகத் தெரிவித்த தலைமை நிர்வாக அதிகாரி அமித் சின்ஹா, பிக் பேஸ்கட் செயலி மூலம் வணிகச் செயல்பாட்டை ஒருங்கிணைக்க இருப்பதாகக் கூறினார். வர்த்தக உறவுகளிலும், சில்லறை வணிகத்திலும் பங்களிக்கும் என்றார். பிக் பஜார் போன்ற நிறுவனங்களோடு மட்டுமல்லாமல், மண்டலம் மற்றும் நகரங்கள் சார்ந்த நிறுவனங்களோடும் வணிக உறவை ஏற்படுத்த இருப்பதாகக் கூறினார்.

வரத்தக உத்தி

வணிக உத்திகளைக் கையாள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், மற்ற சில்லறை விற்பனையில் பங்குகளை வாங்கவும், விற்கவும் தயங்கமாட்டோம் என்றார். எதிர்காலச் சில்லறை விற்பனைக்காள குறைந்த விலை பங்குகளை வாங்க திட்டமிட்டிருப்பதாக வந்த செய்தியை அவர் மறுத்தார்.

போட்டி

ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் ஒரு வலுவான போட்டியாளராகப் பே,டி.எம் கருதுகிறது. 10 ஆண்டுகளில் 200 பில்லியன் டாலர்களை ஈட்டி வளர்ச்சியடைந்துள்ளது. உலக முதலீட்டாளர்களை ஈர்த்துள்ள பே.டி.எம் மால், அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களை நீண்டகாலப் போட்டியாளராகக் கருதி வருகிறது.

மதிப்பு

வர்த்தகத்தின் ஒவ்வொரு பகுதிகளையும் அறிந்திருப்பதாகவும், வணிக உத்திகளைப் பயன்படுத்தும் முதலீட்டாளர்களைப்போல வர்த்தகத்தை நடத்துவதாகச் சின்ஹா கூறினார்.650 மில்லியன் டாலர்களை உயர்த்திய பே.டி.எம் மால், 2 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Have a great day!
Read more...

English Summary

Paytm Mall looks to join hands with BigBasket in fight with Flipkart, Amazon for Indian ecommerce market