மேற்கு வங்கத்தின் 90 சதவீத மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் மம்தா பேனர்ஜி!

காதிய அந்தோலன் தியாகிகளை நினைவுகூர்ந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காதியா சக்தி திட்டத்தின் கீழ் நாட்டின் 90 சதவீத மக்களுக்கு உணவுப்பாதுகாப்பு அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

காதியா சக்தி திட்டத்தின்படி 2 கிலோ கிராம் உணவு தானியங்கள், பாதி விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 8.59 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர்.

காதியா அந்தோலன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிளவுபடுவதற்கு முன்பு 1958 ஆம் ஆண்டுப் பிற்பகுதியில், மேற்கு வங்கத்தில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை எதிர்த்து காதியா அந்தோலன் இயக்கம் வெகு தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டது. 1959 ஆம் ஆண்டு வரை நீடித்த இந்தப் போராட்டத்தில் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

சிறப்பு உதவிகள்

மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட ஜங்கல் மஹல் மலைப் பிரதேச மக்களுக்கும், எய்லா புயலால் பாதிக்கப்பட்ட சிங்கூருக்கும் சிறப்பு உதவிகள் செய்யப்பட்டு வருவதாக மம்தா பானர்ஜி கூறினார்.

விவசாயிகளுக்கு நீதி

டாடாவின் நானோ கார் தொழிற்சாலை அமைப்பதற்காக 2006 ஆம் ஆண்டு அப்போதைய கம்யூனிஸ்டு அரசால், விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டன. உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து பறிக்கப்பட்ட விளைநிலங்களை மம்தா அரசு திருப்பிக் கொடுத்தது.

அரிசி, கோதுமை

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும், வடக்கு வங்காளத்தில் உள்ள டூடூ இன மலைவாழின மக்களுக்கும் அரிசி மற்றும் கோதுமை வழங்கி வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Read more about: west bengal government scheme cm
Have a great day!
Read more...

English Summary

WB Govt providing food security to 90 pct state population through Khadya Sathi scheme