எளிமையான ஜிஎஸ்டி தாக்கல் மென்பொருள் தாமதம்.. தேர்தலில் மோடியை தோற்கடிக்குமா?

எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரித்தாக்கலை நாடாளுமன்றத் தேர்தலுக்குள் முன்பு நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், விரிவான் சோதனை முறையைக் கையாள அவகாசம் இல்லாததால் திட்டமிட்டபடி அமுல்படுத்த முடியாது சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது சிங்கப்பூர் தேர்தல் போன்று மோடிக்கு பாதிப்பினை ஏற்படுத்துமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட குளறுபடிகள் மீண்டும் நிகழக்கூடாது என்று அதிகாரிகள் பணிக்கப்பட்டிருந்தாலும், தகவல் பதிவேற்றம், விநியோகம் உள்ளிட்ட பணிகள் முழுமையாக முடியவில்லை.

அச்சம்

விற்பனைத் தகவலுக்கான படிவம்-1, மாதாந்திர தகவலுக்கான படிவம் -3 ஆகிவற்றில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனால் சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் தொடர்ச்சியான பற்றாக்குறை ஏற்படும் என்று கருதப்படுகிறது. தேர்தல் கால நெருக்கடியில் எழும் புகார்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அதிகாரிகள் நினைக்கிறார்கள்.

தொழில்நுட்ப சவால்

இந்தப் புதிய திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஒரு மென்பொருளைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. தொழில்நுட்பம் அறிந்த வரிச் செலுத்துவோருக்கு பீட்டா வெர்சன் மென்பொருளைத் தருவிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் முழுமையான தொழில்நுட்பத்தைக் கையாள 8 மாதங்கள் வரை பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.

சோதனை முறை

சிறிய சர்வருடன் இணைக்கப்பட்ட முன்மாதிரியான மென்பொருளை, தொழிற்துறை மற்றும் வரித்துறை வல்லுனர்கள் பரீட்சார்த்த முறையில் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். அவர்களால் சுட்டிக்காட்டப்படும் தவறுகள் பின்னர்க் களையப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறப்பம்சம்

ஜி.எஸ்.டி வரித்தாக்கலுக்கான எளிமையாக்கப்பட்ட வடிவத்துக்கு ஆகஸ்டு மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரித்தாக்கலுக்கு இந்தப் புதிய முறை எளிமையாக இருக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய முறையில் விற்பனையாளரின் விலைப்பட்டியலை வாங்குவோர் பார்க்க முடியும்- ஒரு முறை லாக் செய்து விட்டால் விற்பனையாளர் அதனை அழிக்கவோ, திருத்தவோ முடியாது என்பது இதன் சிறப்பம்சம்.

Have a great day!
Read more...

English Summary

GST returns: New system unlikely before next elections