வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? கவலை வேண்டாம் இதைப் படிங்க?

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 2018 ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இருந்தாலும் அதற்குப் பிறகு வருமான வரியை தாக்கல் செய்ய முடியாது சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்று இல்லை. கடைசித் தேதிக்கு பிறகும் வருமான வரியை தாக்கல் செய்யலாம். ஆனால் என்ன அபராதம் மட்டும் செலுத்த நேரிடலாம்.

எனவே வருமான வரியை தாக்கல் செய்யாதவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

அனுமதி

வருமான வரிச் சட்டம் 139(4)-ன் கீழ் வரி செலுத்தினர் அளிக்கப்பட்ட தேதிக்குள் வரி தாக்கல் செய்யவில்லை என்றால் அதன் பின்பும் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர் எனவே 2019 மார்ச் 31-ம் தேதி வரை 2017-2018 நிதி ஆண்டு அல்லது 2018-2019 மதிப்பீட்டு ஆண்டுக்கான வரியினைத் தாக்கல் செய்யலாம்.

அபராதம் கட்டாயம்

அதே நேரம் அபராதமும், அதற்கான வட்டி போன்றவற்றைச் செலுத்தாமல் வருமான வரியைத் தாக்கல் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அபராதம் எவ்வளவு?

வருமான வரியினைத் தாமதமாக 2018 ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் செய்யும் போது 5,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும். அப்போது செய்யத் தவறினால் 10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்.

விலக்கு

இதுவே தாமதமாக வரி செலுத்திய நபரின் ஆண்டு வருவாய் 5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் போது அபராத தொகை அதிகபட்சமாக 1,000 ரூபாய்ச் செலுத்தினால் மட்டும் போதுமானது. ஆனால் வரி தாக்கல் செய்யும் முன்பு இந்த அபராத தொகையினைக் கண்டிப்பாகச் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

Have a great day!
Read more...

English Summary

Missed ITR Filing Deadlile. Here’s what you can do now