பிரதமர் மோடி துவக்கி வைத்த இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சனிக்கிழமை டெல்லி தால்கடோரா மைதானத்தில் இருந்து இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையினைத் துவக்கி வைத்துள்ளார்.

இந்தத் திட்டமானது தபால் துறையினை நிதி சேவைகளில் துறையில் மேலும் மெருகேற்றும். இந்தியாவின் மிகப் பெரிய போமெண்ட்ஸ் வங்கி சேவையினை இது அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்கு 650 கிளைகள் மற்றும் 3250 அணுகல் மையங்கள் அமைக்கப்படும்.

வீடு வரை வங்கி சேவை

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையானது கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களில் இருந்து வங்கி சேவைகளை வீட்டின் கதவு வரை வந்து அளிக்க உள்ளது. இதற்காகத் தபால் டெலிவரி ஊழியர்களையும் பயன்படுத்த உள்ளனர்.

சேவை

2018 டிசம்பர் 31-ம் தேதிக்குள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையானது 1.55 லட்சம் தபால் அலுவலகங்களில் கிடைக்கும் என்றும் பணம் பரிமாற்றம், சேமிப்பு, டெலிபோன் கட்டணம் செலுத்துதல், மின்சாரக் கட்டணம் செலுத்துதல், மொபைல் எண் ரீசார்ஜ் போன்ற சேவைகளும் பல சேவைகளும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி

மேலும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகளுக்கு ரூபே டெபிட் கார்டு, மைக்ரோ ஏடிஎம், மொபைல் வங்கி சேவை, போன்றவையும் கிடைக்கும்.

போட்டி

இந்தியா போஸ்ட் வங்கி சேவையானது ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, ஜியோ பேமெண்ட்ஸ் வங்கிகளுக்கு மிகப் பெரிய போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Have a great day!
Read more...

English Summary

PM Narendra Modi launched India Post Payments Bank; Things To Know About It