எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. வீடு, வாகனம் கடன் வட்டி விகிதங்கள் உயர்த்தி அறிவிப்பு!

பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வீடு, கார், வாகன கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.2 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதால் செப்டம்பர் மாதம் முதல் உங்கள் மாத பட்ஜெட் அதிகரிக்கும். இந்த வட்டி விகித உயர்வானது இன்று முதலே அமலுக்கு வருகிறது.

மூன்று வருடம் வரையிலான அனைத்துக் கடன் திட்டங்களின் மீதான வட்டி விகிதத்தினையும் எஸ்பிஐ வங்கி 0.2 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

ஆர்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 1ம் தேதி ரெப்போ விகிதத்தினை 0.25 சதவீதம் வரை உயர்த்திய நிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு ஆர்பிஐ வங்கி கடன் திட்டங்களின் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.

பிக்சட் டெபாசிட்

அதே போன்று ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தினை அறிவிக்கும் முன்பே எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களின் மீதான வட்டி விகிதத்தினை ஜூலை மாத இறுதியில் உயர்த்தி அளித்த போது வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரெப்போ வட்டி விகிதம்

கடந்த இரண்டு நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தினைத் தலா 0.25 சதவீதம் வரை உயர்த்திய நிலையில் 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற வங்கிகள்

எஸ்பிஐ வங்கி கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.2 சதவீதம் வரை உயர்த்தியுள்ள நிலையில் வரும் வாரங்களில் பிற வங்கி நிறுவனங்களும் வட்டி விகிதங்களை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது.

Read more about: sbi car auto loan

Have a great day!
Read more...

English Summary

SBI hikes its home, car, auto loans lending rate by 0.2%