இது என்னடா ஏர்டெல்க்கு வந்த புதிய சோதனை..!

தேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயம் வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவனங்கள் இணைய அனுமதியினை அளித்த நிலையில் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக இணைந்தது.

இரண்டு நிறுவனங்களும் இணைந்துள்ள நிலையில் வோடாபோன் ஐடியா என்று பெயர் மாற்றம் பெற உள்ளது மட்டும் இல்லாமல் எப்போதும் போலவே சுதந்திரமாகச் செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஏர்டெல்க்குப் பின்னடைவு

வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் இணைந்ததை அடுத்து இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம் என்று இருந்த ஏர்டெல் நிறுவனமானது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இணைவிற்குப் பிறகு மொத்த வருவாயான 80,000 கோடி ரூபாய், 400 மில்லியன் வாடிக்கையாளர்கள், 35 சதவீத சந்தவீத டெலிகாம் சந்தை, 41 சதவீத வருவாய் சந்தை போன்றவற்றை வோடாபோன் ஐடியா பெற்றுள்ளது. முழுமையான இணைவிற்குப் பிறகு டெலிகாம் துறையில் மிகப் பெரிய மாற்றங்கள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாடிக்கையாளர் எண்ணிக்கை

2018 ஜூன் மாத இறுதியில் பார்தி ஏர்டெலின் வாசிக்கையாளர்கள் எண்ணிக்கை 344.56 மில்லியனாகவும் வோடாபோனிற்கு 222.73 மில்லியனாகவும், ஐடியா வசம் 222.06 மில்லியனாகவும், ரிலையன்ஸ் ஜியோ வசம் 215.26 மில்லியனாகவும் வாடிக்கையாளர் எண்ணிக்கை உள்ளதாக டிராய் தெரிவித்து இருந்தது.

ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016-ம் ஆண்டுத் தான் வணிக ரீதியான டெலிகாம் சேவையினைத் துவங்கியது என்றாலும் 6 மாதங்கள் வரை இலவச குரல் அழைப்புகள் மற்றும் தரவுகளை அளித்து வாடிக்கையாளர்களை மிகப் பெரிய அளவில் ஈர்த்தது.

முக்கிய நிகழ்வுகள்

சென்ற ஆண்டு டாடா குழுமம் தங்களது மொவைல் வணிகத்தினை ஏர்டெல்க்கு விற்றது, முகேஷ் அம்பானி ஆர்காமின் ஸ்பெக்டர்ம்களைக் கைப்பற்றியது, டெலினார் மற்றும் டிக்கோனா நிறுவனங்களை ஏர்டெல் வாங்கியது போன்றவையும் டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் ஆகும்.

வருவாய் மற்றும் லாபம்

அதே நேரம் ஏப்ரல்-ஜூன் இடையிலான முதல் காலாண்டில் பார்தி ஏர்டெல்லின் நிகர லாபமானது 74 சதவீதம் வரை சரிந்து 973 மில்லியன் ரூபாய் என அறிவிக்கப்பட்டது. இந்திய செயல்பாடுகளின் மூலம் மட்டும் 9.4 பில்லியன் ரூபாய் நிகர நட்டம் அடைந்ததாகவும் பார்தி ஏர்டெல் தெரிவித்து இருந்ததுஜ்.

வோடாபோன் இந்தியாவின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு வருவாயும் 31 சதவீதம் வரை சரிந்ததாக அறிவித்து இருந்தனர்.

அதே நேரம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது 6.12 பில்லியன் ரூபாய் நிகர லாபம் அடைந்துள்ளதாகவும், 81.09 பில்லியன் ரூபாய் வருவாய் பெற்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

Have a great day!
Read more...

English Summary

Vodafone Idea Merger Made Them Country’s Largest Telecom Operator